சாமுவேல் ஆடம்ஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாமுவேல் ஆடம்ஸ் (Samuel Adams, செப்டம்பர் 27 [யூ.நா. செப்டம்பர் 16] 1722 – அக்டோபர் 2, 1803) ஒரு அமொிக்க அரசியல் அறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் அமெரிக்காவின் தந்தை என்றழைக்கப்பட்டவர்களுள் ஒருவராவார். இவர், அமெரிக்காவில், மாசாசூசெட்சு மாகாணத்தின் அரசியல்வாதியாகவும் அமெரிக்கப் புரட்சியின் தலைவராகவும், அமெரிக்க அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கிய அமெரிக்க குடியாட்சித் தத்துவத்தை உருவாக்கியவர்களுள் ஒருவராவார். அமெரிக்காவை உருவாக்கிய ஜான் ஆடம்சின் நெருங்கிய உறவினர் ஆவார்.[1]
ஆடம்ஸ், பாஸ்டன் நகரில் பிறந்தார். இவர் ஆன்மீகம், அரசியலில் ஈடுபாடுள்ள குடும்பத்தில் வளர்ந்தார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். தொழிலில் தோல்வியுற்று, பின்பு வரிவசூலிப்பவராக இருந்தார். அதன்பிறகு அரசியலில் ஈடுபட்டார். மாசாசூசெட்ஸ் பிரதிநிச் சபையில் செல்வாக்குமிக்க தலைவராகத் திகழ்ந்தார். அதன்பிறகு ஆங்கிலோ-அமெரிக்க காலனிகளின்மேல் அவர்கள் அனுமதியில்லாமல் வரிவிதித்தை எதிர்த்து போராடினார். இவருடைய 1768 மாசாசூசெட்ஸ் சுற்றறிக்கைக் கடிதம், காலனி நாடுகளின் ஆங்கில அரசுக்கு ஒத்துழையாமையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக 1770 பாஸ்டன் படுகொலை நடந்தது. 1772-ஆடம்ஸ் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களும் சேர்ந்து ஒரு தொடர்புக் குழுவை ஏற்படுத்தினர். இக்குழுவின் வேலை ஆங்கில ஏகாதிபத்திய அரசை எதிர்க்கும் 13 குடியேற்ற நாடுகளில் உள்ளவர்களை ஒருங்கிணைப்பது. தொடர்ந்து ஆங்கிலேய அரசின் செயல்திற நுட்பத்தை எதிர்த்ததின் விளைவாக 1773-ல் பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அமெரிக்கப் புரட்சி ஏற்பட்டது. ஆங்கில நாடாளுமன்றம் 1774 இல் ஒரு கடுமையான சட்டத்தை பிறப்பித்தது. அச்சமயத்தில், ஆடம்ஸ் பிலடெல்பியாவில் நடந்த அமெரிக்கப் புரட்சிக் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். இம்மாநாடு காலனி ஆதிக்க நாடுகளை ஒன்றிணைத்தது. இவர் 1774-ல் அமெரிக்கப் புரட்சி அமைப்பு உருவாக உதவினார், மற்றும் 1776-ல் அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனத்திற்கு வழிகோலினார். இவர் கூட்டுக்குழுவின் விதிகள் மற்றும் மாசாசூசெட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கவும் உதவியாக இருந்தார். அமெரிக்கப் புரட்சிக்குப் பிறகு, ஆடம்ஸ் மாசாசூசெட்ஸ் -க்கு வந்து, அங்கு ஆட்சிமன்றத்தில் பணியாற்றினார். இறுதியாக ஆளுநராக தேர்வுசெய்யப்பட்டார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
