மாசச்சூசெட்சு விரிகுடா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாசச்சூசெட்சு விரிகுடா மாகாணம் (Province of Massachusetts Bay[1]வட அமெரிக்காவில் 1692 முதல் இருந்த பிரித்தானியக் குடியேற்றமாகும்; இது 1776 முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் பதின்மூன்று மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. அக்டோபர் 7, 1691 அன்று இங்கிலாந்து, இசுக்காட்லாந்து மற்றும் அயர்லாந்தின் கூட்டு அரசர்களாக இருந்த வில்லியமும் மேரியும் இந்த மாகாணத்தை நிறுவும் அரசாணையை வெளியிட்டனர். இந்த அரசாணை மே 14, 1692 அன்று செயல்பாட்டிற்கு வந்தது; புதிய மாகாணத்தில் மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம், பிளைமவுத் குடியேற்றம், மேய்ன் மாகாணம், மார்த்தாவின் திராட்சைத் தோட்டம், நான்டாக்கெட், நோவா ஸ்கோசியா மற்றும் நியூ பிரன்சுவிக் பகுதிகள் அடங்கியிருந்தன. தற்கால மாசச்சூசெட்ஸ் மாநிலம் இதன் நேரடி பின்வருநராகும்; 1820 முதல் மேய்ன் தனியான ஐக்கிய அமெரிக்க மாநிலமாயிற்று; நோவா ஸ்கோசியா மற்றும் நியூ பிரன்சுவிக் இரண்டும் 1697இலிருந்து பிரிந்து தற்போது கனடாவின் மாநிலங்களாக உள்ளன.
மாகாணத்தின் பெயரான மாசச்சூசெட்சு உள்ளக தொல்குடி மக்களின் மாசச்சூசெட்சு மொழியிலிருந்து வந்துள்ளது; இது பெரிய மலைப்பகுதியில், பெரிய மலைகளின் இடத்தில் எனப் பொருள்படும். இங்குள்ள பெரும் நீல மலையை ஒட்டி இப்பெயர் எழுந்துள்ளது.
Remove ads
மேற்சான்றுகள்
மேற் படிப்பிற்கு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads