சாம்பவர் வடகரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாம்பவர் வடகரை (Sambavar Vadagarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தின், கடையநல்லூர் வட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை பேரூராட்சி ஆகும்.
Remove ads
அமைவிடம்.
திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ.; சுரண்டையிலிருந்து 5 கி.மீ.; ஆய்க்குடியிலிருந்து 5 கி.மீ.; கடையநல்லூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் சாம்பவார் வடகரை பேரூராட்சி உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 15 கி.மீ. தொலைவில் உள்ள தென்காசி ஆகும்.
போக்குவரத்து
சுரண்டையில் இருந்து சாம்பவர் வடகரை வழியாக தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சேர்ந்தமரம் பகுதிகளுக்கும் தென்காசியில் இருந்து அருணாசலபுரம், வாடியூர், வீராணம், வீரகேரளம்புதூர், இடையர் தவணை பகுதிகளுக்கும், செங்கோட்டையில் இருந்து ஆணைகுளம், வீரகேரளம்புதூர் பகுதிகளுக்கும், திருமலைக்கோவிலில் இருந்து சாம்பார் வடகரை, சுரண்டை வழியாக திருநெல்வேலிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பேரூராட்சியின் அமைப்பு
11 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,423 வீடுகளும், 16,709 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads