சாயாஜி ராவ் கெய்க்வாட் III
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாயாஜிராவ் கெய்க்வாட் III (Sayajirao Gaekwad III) (பிறப்புப் பெயர்:கோபால்ராவ் கெய்க்வாட்); 11 மார்ச் 1863 – 6 பிப்ரவரி 1939) பிரித்தானிய இந்தியாவின் துணைப்படைத் திட்டத்தை ஏறறுக்கொண்டிருந்த சுதேச சமஸ்தானங்களில் ஒன்றான, தற்கால குஜராத் மாநிலத்தின் பெரும்பகுதிகளை ஆண்ட பரோடா இராச்சியத்தின் மகாராஜாவாக 1875 முதல் 1939 முடிய 64 ஆண்டுகள் இருந்தவர்.

இவரது காலத்தில் பரோடோ இராச்சியத்தின் பொருளாதாரம், கல்வி, தொடருந்து போக்குவரத்து, பரோடா வங்கி போன்ற உள்கட்டமைப்புகள் பெருகியது. இவரது இராச்சியத்தில் குழந்தைத் திருமணத்தை ஒழித்தவர்.மேலும் துவக்கப் பள்ளிக் கல்வியை கட்டயமாக்கியவர். இவர் மராத்திய கூட்டமைப்பின் ஒன்றான கெயிக்வாட் வம்சத்தைச் சேர்ந்தவர்.
மேலும் இவர் ராஜா ரவி வர்மாவை ஆதரித்தவர். இராஜ ரவி வர்மாவின் வரைந்த அனைத்து ஓவியங்களின் காப்புரிமை இவரிடம் உள்ளது.
Remove ads
படக்காட்சிகள்
- பம்பாய் மாகாண ஆளுநருடன் மகாராஜா சாயாஜி ராவ் கெய்க்வாட்டின் குடும்பத்தினர், 1880
- 64 கதவுகள் கொண்ட நீர்த்தேக்கம், பரோடா இராச்சியம்
- மகாராஜா சாயாஜி ராவ் III கெய்க்வாட்டின் சிலை, பரோடா
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads