சாயிஷா
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாயிஷா ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் தோன்றி, இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.[1][2] தெலுங்கு படமான அகில் (2015) படத்தில் நடித்த பிறகு, அஜய் தேவ்கானின் சிவாய் (2016) படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார்.[3][4] பிறகு வனமகன் (2017) படத்தில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
Remove ads
சொந்த வாழ்க்கை
நடிகர்களான சுமேத் சைகால் மற்றும் ஷாஹீன் பானு ஆகியோரின் மகள் இவர். இவர் நடிகர்களான சைரா பானு [5] மற்றும் திலிப் குமார் ஆகியோரின் பேத்தி முறை அதாவது இவரது அம்மாவின் (ஷாஹீன் பானு) அப்பா சைரா பானுவின் சகோதரர் .[6] 13 பிப்ரவரி 2019 அன்று சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கும் ஆர்யாவிற்கும் மார்ச் மாதத்தில் திருமணம் என்று அறிவித்தார்.[7] இவர்களது திருமண விழா ஐதராபாத்தில் 8 மார்ச்சு 2019 இல் தொடங்கியது. இந்தி மற்றும் தமிழ்த் திரைப்படத்தை சேர்ந்த பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.[8][9]
Remove ads
தொழில்
தெலுங்கு திரைப்படமான அகில் (2015) திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் அறிமுகமானார் சாயிஷா. இரண்டாவது படமாக அஜய் தேவ்கானின் சிவாய் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.[10] அவரது திரைப்படமான வனமகன் ஜூன் மாதம் 2017 இல் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்இவர் அறிமுகமானார்.[11][12][13] 2018 இல், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம், விஜய் சேதுபதியுடன் ஜுங்கா, மற்றும் ஆர்யாவுடன் கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது காப்பான் என்ற படத்தில் சூர்யாவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். .
Remove ads
திரைப்பட வரலாறு
![]() |
இன்னும் வெளியிடப்படாத படங்கள் குறிப்பிடுகின்றன |
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads