சாரசீனியா

From Wikipedia, the free encyclopedia

சாரசீனியா
Remove ads

சாரசீனியா(Sarracenia) என்பது ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது சாரசீனியேசியீ (sarraceniaceae) என்னும் இரட்டை விதையிலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் 10 வகைச் செடிகளும் சில கலப்பினச் செடிகளும் உள்ளன. இச்செடிகள் வட அமெரிக்காவில் வெப்பப்பிரதேச புல்வெளியில் உள்ள ஈரமான சேறு நிறைந்த பகுதியில் நன்கு வளர்கின்றன. மங்கிப்போன சருகுடன் கூடிய கருப்பு மணல் நிறைந்த பகுதிகளில் இவை நன்கு வளர்கின்றன. இதன் இலைகள் ஜாடி வடிவத்தில் மிகவும் அழகாக இருக்கும். இதன் பூக்களின் அழகுக்காகவே தோட்டங்களில் இதனை வளர்ப்பார்கள். சுமார் 300 ஆண்டுகளாக இவை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன். டாக்டர். டி. சாரசின் (Dr. Sarrasin) என்ற புகழ் பெற்ற மருத்துவர் பெயரே இச்செடிக்கு வைக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் சாரசீனியா, உயிரியல் வகைப்பாடு ...
Thumb
The anatomy of S. purpurea
Remove ads

பெயர்கள்

இச்செடிகளை கீழ்க்கண்ட பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

  • ஜாடிச் செடி (pitcher plant)
  • இந்தியன் ஜாடிச் செடி(Indian pitcher plant)
  • பிசாசு பூட்ஸ் அல்லது பேய் பூட்ஸ்( Devils boots)
  • முன்னோர்களின் கிண்ணம் அல்லது கோப்பை(Forefathers cup)
  • வேடுவன் அல்லது வேட்டைகாரனின் கிண்ணம்(Huntsmaans cup)
  • ஊதுகுழல்கள்(Trumpets)
  • வட அமெரிக்கன் ஜாடிச் செடி (North American pitcher plant))
  • தொலைநோக்கிச் செடி( Watches)

அமைப்பு

இச்செடிகள் பல பருவச் செடியாகும். இதன் அடியில் மட்டத்தண்டுக் கிழங்கு உள்ளது. இதிலிருந்து 3 முதல் 8 இலைகள் சுமார் 10 முதல் 70 செ. மீ நீளம் வரை வளரும். இதன் இலைகள் அனைத்தும் ஜாடிகளாகவே உள்ளன. இந்த ஜாடிகள் ஊது குழாய் போன்ற அமைப்பில் உள்ளன. இவை வசந்த காலத்தில் வளர்கின்றன. சில இனச் செடிகளில் இலையுதிர் காலத்தில் இதன் ஜாடிகள் தட்டையாக வளர்கின்றன. இலையின் விரிந்த காம்பே ஜாடியாக மாறுகிறது. இலைப் பரப்பு மூடியாக மாறி உள்ளது.

Remove ads

ஊனுண்ணித் தாவரங்கள் பகுப்பு

மேலதிகத் தகவல்கள் வரிசைஎண், குடும்பம் ...

வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads