சாரதா நம்பிஆரூரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முனைவர் சாரதா நம்பிஆருரன் ஒரு தமிழறிஞர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளராவார். இவர் தமிழ்நாட்டு தகவல் ஆணையத்தின் முதன்மை ஆணையராகவும் சென்னை கம்பன் கழகத்தின் இணைச் செயலராகவும் பதவி வகித்துள்ளார்.[1] இவரது கணவர் கு. நம்பிஆருரன் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கிய மறைமலைஅடிகளின் மகளான கு. திரிபுரசுந்தரியின் மகனாவார்.[2]
Remove ads
இளமைக்காலமும் கல்வியும்
திருநெல்வேலி மாவட்டம் சங்கர நயினார் கோயிலைச் சேர்ந்த இவர் சென்னை இராணி மேரிக் கல்லூரியில் 1967 இல் முதுகலைத் தமிழில் பட்டமும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1982 இல் நிறைஞர் பட்டமும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 1987 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.
பணி வாழ்க்கை
1967 முதல் நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், சென்னை இராணி மேரிக் கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியவர். சேலம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 2004 முதல் 2005 வரை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். 1972 முதல் 1976 வரை குடும்பத்துடன் இலண்டனில் வாழ்ந்தபோது பி.பி.சி. தமிழோசையில் பணியாற்றினார்.[3]
இலக்கிய சமயப்பணி
இலண்டன் முருகன்கோவில் குழுவில் சிறப்பு உறுப்பினராகவும் இலண்டனில் முறையாகத் தமிழ் வகுப்பும் இசைவகுப்பும் நடத்தினார். தமிழ்ப்புலமை, இசையாற்றல் ஆகிய இரண்டையும் இணைத்து இசை பேருரை ஆற்றுவது இவரின் தனிச்சிறப்பு[4] அகில இந்திய வானொலி நிலையத்தில் 15 வயது முதல் இளையபாரதம், வினாடி வினா, மாதர் நிகழ்ச்சி, சான்றோர் சிந்தனை, இலக்கியப் பேருரைகள் வழங்கியுள்ளார். 1991- 92 மார்கழி மாதம் 30 நாட்களும் வானொலியில் திருவெம்பாவைப் பாடல்களுக்கு விளக்கம் தந்துள்ளார். தொலைக்காட்சியிலும் வினாடிவினா, சமயப் பேருரைகள், இலக்கியச் சோலை நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கியுள்ளார். 1992 ல் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமகம் விழாவைத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய போது நேர்முக வர்ணனை செய்துள்ளார். இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல அயல்நாடுகளில் இலக்கிய சமய சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
Remove ads
வெளியிட்ட நூல்கள்
- அலைகடலுக்கப்பால்-பயணநூல்
- நீலாம்பிகை அம்மையாரின் படைப்புகளில் சமுதாயச் சிந்தனைகள்
- பாவைப்பாடல் - விளக்கம்
- செஞ்சொற்கவி இன்பம்
- தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
- ஆரூரன் அருந்தமிழ்
- சான்றோர் சிந்தனைகள்
- சொற்றமிழ் பாடுக.
- சகல கலாவல்லி மாலை (உரை)
- பயன் தரும் பதிகங்கள்.
குறிப்பிடத்தக்க விருதுகள்
- தமிழக அரசு - நல்லாசிரியர் விருது டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (1997)[5]
- தமிழக அரசின் கலைமாமணி விருது (1998)[6]
- தமிழக அரசின் பேரறிஞர் அண்ணா விருது (2007)[7]
- சென்னை கம்பன் கழகத்தின் இயற்றமிழ் அறிஞர் விருது (2025)[8]
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads