சார்க்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இக்கட்டுரை "சார்க்" என்னும் தீவைப் பற்றியது. இதே பெயரில் உள்ள அமைப்பு பற்றி அறிய சார்க் அமைப்பு கட்டுரையைப் பார்க்கவும்.
சார்க் (Sark, பிரெஞ்சு: Sercq) என்பது தென்மேற்கு ஆங்கிலக் கால்வாயில் உள்ள சானெல் தீவுகளில் ஒன்றான கேர்ன்சியின் ஒரு சிறிய தீவாகும். இதன் மொத்த மக்கள் தொகை 600 (2002 இல் 610) ஆகும். இதன் பரப்பளவு 2 சதுர மைல்கள். இங்கு தானுந்துகள் அனுமதிக்கப்படுவதில்லை. பதிலாக குதிரை வண்டில்களே முக்கிய போக்குவரத்தாகும். அதைவிட மிதிவண்டி, உழவு வண்டி, மின்கலங்களில் இயங்கும் தானுந்துகள் (வலது குறைந்தோருக்காக) ஆகியனவும் பாவனையில் உள்ளன. சுற்றுலாத்துறை ஒரு முக்கிய வருவாய் தரும் தொழிலாகும்.
சார்க்கின் அதி உயரமான இடம் கடல் மட்டத்தில் இருந்து 374 அடிகள் (114 m) ஆகும். 1571 இல் கட்டப்பட்ட காற்றாலை ஒன்று இங்கு உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியினரால் இதன் பாகங்கள் சேதமாக்கப்பட்டன.
பிரெக்கு என்ற தீவும் சார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது ஒரு தனியாரின் தீவாகும். தற்போது இங்கு சேர் டேவிட் மற்றும் பிரெடெரிக் பார்க்லே என்போர் வசிக்கின்றனர். இவர்கள் இதனை 1993 இல் வாங்கினார்கள். வெளியாட்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
Remove ads
அரசியல்

சார்க் தீவு ஐரோப்பாவின் கடைசி நிலமானிய (feudal) அமைப்பாக இருந்து வந்தது.[1]. குத்தகை (fiefdom) இங்கு இன்னமும் நடைமுறையில் உண்டு. ஆனாலும், ஏப்ரல் 2008 இல் ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சில் சார்க் தீவில் நிலமானிய அமைப்பை மாற்றி மக்களாட்சி முறைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது[2].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads