சாவகச்சேரி இந்துக் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாவகச்சேரி இந்துக் கல்லூரி (Chavakachcheri Hindu College) இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், தென்மராட்சிப் பகுதியில் சாவகச்சேரி நகரத்தில் கண்டி வீதியில் அமைந்திருக்கும் பாடசாலை ஆகும்.[1][2] இங்கு இடைநிலை, உயர் தரம் வரையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. அதாவது தரம் 6 முதல் தரம் 13 வரையான வகுப்புக்களுடன் இயங்கிவருகின்றது. அப் பாடசாலை தென்மராட்சியில் இருக்கும் ஒரே தேசிய பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.
![]() | இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
Remove ads
வரலாறு
1904 இல் சாவகச்சேரிச் சந்தைக்கண்மையில் ஒரு சைவத் தமிழ்க் கலவன் பாடசாலை வி. தாமோதரம்பிள்ளை என்பவரால் நிறுவப்பட்டது. 1905 இல் அது சங்கத்தானைக்கு மாற்றப்பட்டது. இதன் முதற்றலைமையாசிரியர் கே. எஸ். கந்தசாமி ஆவார்.[3] 1907 இல் இருமொழிப் பாடசாலையானது. 1908 இல் தமிழ்ப் பாடசாலை சங்கத்தானை கந்தசாமி கோயிலின் பின் வீதிக்கு இடம் மாறியது. 1921 இல் (அரசினர் நன்கொடையுடன்) ஆங்கிலப்பாடசாலை வி. தாமோதரம்பிள்ளையால் ஆரம்பிக்கப்பட்டது. 1922 இல் யாழ்ப்பாணம் இந்துச் சபையினரிடம் ஆங்கிலப்பாடசாலை ஒப்படைக்கப்பட்டது. 1926 இல் கோவிலடித் தமிழ்ப் பாடசாலை சாவகச்சேரிக்குக் கொண்டு வரப்பட்டது. 1934 இல் சி பிரிவுக் கல்லூரியானது. க.பொ.த (சா. த) வகுப்புகள் ஆரம்பித்தன. 1937 இல் தமிழ்ப் பாடசாலையும் யாழ்ப்பாணம் இந்துச்சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1943 இல் விளையாட்டு இல்லங்கள் அமைக்கப்பட்டன. 1945 இல் பி பிரிவுக் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டது. க.பொ.த. வகுப்பிற்கு விஞ்ஞானக் கல்வி போதிக்கப்பட்டது. 1949 இல் ஏ பிரிவாகத் தரமுயர்த்தப்பட்டது. க. பொ. த (உ.த) வகுப்புகள் ஆரம்பமாயின. 1954 இல் முதன்முதலாக இரு விஞ்ஞானத்துறை மாணவர்கள் பல்கலைக்கழகம் புகுந்தனர். 1957 இல் பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டது. தமிழ்ப் பாடசாலை ஆங்கிலப்பாடசாலையுடன் இணைக்கப்பட்டது. 1962 ஏப்ரல் 15 இல் அரசாங்கம் பொறுப்பேற்றது. 1979 இல் இப்பள்ளி மத்திய மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது. 1989 ஆகத்து 29 இல் இருந்து இந்து ஆரம்பப் பாடசாலை என்ற பெயருடன் ஆரம்பப்பிரிவு தனித்து இயங்கத் தொடங்கியது. அவ்வேளை 6 – 13 வரையான வகுப்புக்களுடன் இந்துக் கல்லூரி தொடர்ந்து இயங்கியது. 1993 பெப்ரவரி 5 இல் தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.
Remove ads
மகுடவாசகம்
நலமே நாடுக நலமே புரிக நலமே ஒளிர்க
தூர நோக்கு
ஆளுமையும் அறிவாற்றலும் உள்ள நற்பிரஜைகளை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் ஒரு முன்னணிப் பாடசாலையாக விளங்க வைத்தல்.
பணிக்கூற்று
தேசிய கல்விக் கொள்கைகளுக்கு ஏற்ப சகல மாணவர்களையும் வழிப்படுத்தி, சைவத் தமிழ் மரபுகளையும் விழுமியங்களையும் பேணி, நவீனத்துவத்திற்கு முகங்கொடுக்கும் வகையில் அதற்கான பலத்தையும் அர்ப்பணிப்பையும் அவர்களுக்கு வழங்குதல்.
பாடசாலைக் கீதம்
இராகம் - தர்பார்
தாளம் - ரூபகம்
- பல்லவி
- வாழ்க இந்துக்கல்லூரி வாழ்கவே - வாழ்கவே
- வாழ்க இந்துக் கல்லூரி வாழ்கவே - வாழ்கவே
- அனுபல்லவி
- வாழ்க நம்திரு வாழ்க நம் கலை
- நாளும் நன்மையும் உண்மையும் ஓங்கவே (வாழ்க)
- சரணம்
- அறமும் அன்பும் அருளும் தழைக்க
- ஆன்மநேய உணர்வு செழிக்க
- உறவு கனிந்தே உயர்வு நிலைக்க
- உலகில் புகழும் அறிவும் தரிக்க (வாழ்க)
Remove ads
இப்பாடசாலையின் அதிபர்கள்
• எஸ். சுவாமிநாதன் 1923 - 1929
•கே.ரி.கென்ஸ்மன் 1929-1933
•என்.அருணாசலம் 1934 - 1935
•வி.பாலசுந்தரம் 1935-1941
•ரி.முத்துக்குமாரு 1942 - 1951
•ஏ.எஸ்.கனகரட்ணம் 1952 - 1953
•ஏ.மண்டலேஸ்வரன் 1954 - 1962
•ஏ.கந்தையா 1963 - 1965
•எம்.வைத்திலிங்கம் 1966 - 1970
•பி.வெற்றிவேலு 1970 – 1984
•கே.எஸ்.குகதாசன் 1985 – 1990
•கே.சந்திரசேகரா 1990 – 2000
•ஆர்.கயிலைநாதன் 2000 – 2004
•ஏ.கயிலாயபிள்ளை 2005 - 2015
•நடராஜா சர்வேஸ்வரன் 2016
Remove ads
கல்லூரி இல்லங்கள்
1943 ஆம் ஆண்டிலே த.முத்துக்குமாரு அவர்கள் அதிபராக இருந்த காலத்திலே முதன் முதலாக இல்லங்கள் அமைக்கப்பட்டு மாணவரிடையே இல்லரீதியாகப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. முதலில் மாணவர் தொகையைக் கருத்திற் கொண்டு ஆனந்தா, நேரு, ஸ்ரீசுமங்கலா, தாமோதரம் என நான்கு இல்லங்கள் அமைக்கப்பட்டன. மாணவர் தொகை அதிகரித்துச் செல்லச் செல்ல மேலும் ஒரு இல்லம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனைக் கருத்திற் கொண்டு 1975 ஆம் ஆண்டு அதிபராகவிருந்த பூ.வெற்றிவேலு அவர்களால் ஐந்தாவது இல்லமாக முத்துக்குமாரு இல்லம் அமைக்கப்பட்டது.
இவ்வாறாக அமைக்கப்பட்ட இல்லங்கள் ரீதியாக விளையாட்டுப் போட்டிகள் மட்டுமன்றி கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பாடல் போட்டி, பேச்சுப் போட்டி என்பனவும் நடத்தப்படுகின்றன.
Remove ads
கல்லூரிக்கொடி
கல்லூரிக்கொடியும் மனிதன் பெற வேண்டிய நற்பேற்றின் சின்னமாக விளங்குகின்றது. அவன் எந்த நலத்தைப் பெற விரும்பினாலும் தன்னை மையமாகக் கொண்டே சிந்திக்கின்றான்.செயற்படுகின்றான். அதனால் முரண்பாடுகளும், போராட்டங்களும் அழிவுச் சிந்தனைகளும் வளர்கின்றன.
மாணவர் மன்றங்கள்
- விஞ்ஞான மன்றம்
- உயர்தரக் கலைமன்றம்
- உயர்தர வர்த்தக மன்றம்
- உயர்தர மாணவர் மன்றம்
- விவசாய விஞ்ஞான மன்றம்
அமைப்புகள்
- பரியோவான் முதலுதவிச் சங்கம்
- சாரணர் குழு
- பெண்கள் வழிகாட்டி
- லியோக்கழகம்
- கடேற் அமைப்பு
போட்டிகள்
இக்கல்லூரியில் மாணவர்களின் பல்வேறுபட்ட திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடாத்தப்படுகின்றன.
- தமிழ்மொழிததினப்போட்டி
- ஆங்கிலமொழித்தினப்போட்டி
- வணிகப்போட்டி
- சமூக விஞ்ஞானப்போட்டி
- கணித வினாடிவினாப்போட்டிகள்
- கணித ஒலிம்பியாட்போட்டி
- சமயப்போட்டிகள்
மேற்கோள்கள்
உசாத்துணை நூல்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads