சாவக்காடு கடற்கரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாவக்காடு கடற்கரை (Chavakkad Beach) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் சாவக்காடு நகராட்சியில் அமைந்துள்ள ஒரு கடற்கரையாகும். அரபிக் கடல் கரையோரத்தில் இக்கடற்கரை உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை ஈர்க்கின்ற வகையில் அமைந்துள்ளது. குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற குருவாயூர் சிறீகிருட்டிணா கோயிலிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் நதி சமுத்திரத்தைச் சந்திக்கும் கழிமுகம் உள்ளது. இச் சந்திப்புப் புள்ளியை மலையாளத்தில் ஆழிமோகம் என்று அழைக்கப்படுகிறது. சாவக்காடு கடற்கரை கேரளாவின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த கடற்கரை உள்ளூர் சுற்றுலாப்பயணிகளால் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை [1][2].
Remove ads
எப்படிச் செல்வது
சாலை வழி
- இந்திய தேசிய நெடுஞ்சாலை 17 சாவக்காடு நகரம் வழியாக செல்கிறது. தெற்கில் கொச்சியிலிருந்து மலபார் வழியாக வடக்கு நோக்கி மங்களூருக்குச் செல்கிறது.
- சாவக்காடு நகரில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சூர், கொச்சி, குருவாயூர், கோழிக்கோடு மற்றும் பொன்னானி ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் செல்கின்றன.
- கேரள மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் குருவாயூரிலிருந்து சாவக்காடு வழியாக கோழிக்கோடு நகரத்தை கடந்து செல்கின்றன.
- சாவக்காடு நகரமெங்கும் வாடகை ஆட்டோக்கள் வலம் வருகின்றன.

இரயில் வழி
- சாவக்காடு கடற்கரைக்கு அருகில் குருவாயூர் இரயில் நிலையம் உள்ளது. திரிச்சூர் இரயில் நிலையத்திலிருந்து தொடங்கும் இந்த பாதை குருவாயூரில் முடிவடைகிறது. எர்ணாகுளம் இரயில் நிலையத்திற்கு ஒரு பயணிகள் இரயிலும் திருச்சூர் இரயில் நிலையத்திற்கு ஒரு பயணிகள் இரயிலும் இயக்கப்படுகின்றன. சென்னை நகருக்கு ஒரு விரைவு இரயிலும் செல்கிறது.
- தென்னிந்திய மற்றும் வட இந்திய நெடுந்தொலைவு இரயில்களைப் பெறக்கூடிய முக்கிய இரயில் நிலையமாக திருச்சூர் இரயில் நிலையம்,திகழ்கிறது.
வான் வழி
- சாவக்காடு கடற்கரைக்கு அருகில் கொச்சி சர்வதேச விமான நிலையம் 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் கிடைக்கின்றன.
- சாவக்காடு கடற்கரையில் இருந்து கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் சுமார் 104 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads