புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிஎம்பிடி மெற்றோ நிலையம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிஎம்பிடி மெற்றோ நிலையம் (Puratchi Thalaivi Dr. J. Jayalalithaa CMBT Metro Station) சென்னை மெற்றோவின் 2வது வரிசையில் உள்ள மெற்றோ இரயில் நிலையமாகும், இது தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையம் சென்னை மெற்றோவின் இரண்டாம் தாழ்வாரத்தில் வரும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய மெற்றோ-பரங்கிமலை தொரருந்து தொடரில் வரும் உயரமான நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் முக்கியமாகப் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திற்கு வருவோருக்குச் சேவை செய்கின்றது. 31 ஜூலை 2020 அன்று, முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களை நினைவு கூறும் விதமாக[1] தமிழக அரசு புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சி.எம்.பி.டி மெற்றோ என்று பெயரிட்டது. இது ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து மற்றும் மெற்றோ நிலையமாகும்.
Remove ads
கட்டுமான வரலாறு
இந்த நிலையத்தை ஒருங்கிணைந்த கட்டமைக்கப்பட்ட கூட்டமைப்பு (சி.சி.சி.எல்) கட்டியது. இந்த நிலையம் டிசம்பர் 2012இல் கட்டமைப்பு நிறைவடைந்தது. அரும்பாக்கம், கோயம்பேடு, வடபழநி மற்றும் அசோக் நகர் மெற்றோ நிலையங்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த திட்டமாக ₹ 1,395.4 மில்லியன் செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது.[2]
நிலையம்
பிரதான முகப்பு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திற்குள் உயரமான நிலையமாகக் கட்டப்பட்டுள்ளது. தளங்களின் உயரம் சுமார் 15 மீட்டரும் தளங்களின் மொத்த நீளம் 140 மீட்டராகவும் உள்ளது. இந்த நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 23,000 பயணிகளைக் கையாள முடியும். [3]
தளவமைப்பு
ஜி | தெரு நிலை | வெளியேறு / நுழைவு |
எல் 1 | மெஸ்ஸானைன் | கட்டணக் கட்டுப்பாடு, நிலைய முகவர், மெட்ரோ கார்டு வழங்கும் இயந்திரங்கள், குறுக்குவழி |
எல் 2 | பக்க மேடை எண் -1, இடதுபுறத்தில் கதவுகள் திறக்கப்படும்![]() | |
தென்பகுதி | நோக்கி → செயின்ட் தாமஸ் மவுண்ட் | |
வடபகுதி | → நோக்கி ← புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய மெட்ரோ | |
பக்க மேடை எண் -2, கதவுகள் இடதுபுறத்தில் திறக்கப்படும்![]() | ||
எல் 2 | ||
Remove ads
ஆதரவு உள்கட்டமைப்பு
கோயம்பேடு சந்திப்பிலிருந்து 1 கி.மீ. தூரத்திற்குள் இந்நிலையம் அமைந்துள்ளது. ஜவஹர்லால் நேரு சாலை மற்றும் காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதியில் குறைந்தது மூன்று பாதசாரி சுரங்கப்பாதை திட்டம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. [3]
வணிக மையம்
சென்னை மெற்றோ திட்டத்தின் முதல் கட்டமாக வணிக மையங்களாக மாற்றப்படுவதாக அடையாளம் காணப்பட்ட ஐந்து நிலையங்களில் இந்த நிலையம் ஒன்றாகும். மற்றவை அறிஞர் அண்ணா ஆலந்தூர், அரும்பாக்கம், ஈக்காட்டுத்தங்கல் மற்றும் அசோக் நகர் ஆகும். நில வசதியினைப் பொறுத்து நிலையத்தின் இரு முனைகளிலும் இரண்டு கட்டிடங்கள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளன. [4]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads