சிகொக்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஷிகொக்கு (Shikoku, 四国—நான்கு நாடுகள்) ஜப்பானின் நான்கு முக்கியத் தீவுகளில் மிகச்சிறிய தீவு ஆகும்.[1] 2005-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 4,141,955 மக்கள் வசிக்கின்றனர்.
Remove ads
புவியியல்
சிகொக்கு தீவின் பரப்பளவு அதனை சுற்றியுள்ள தீவுகளின் பரப்பளவுகளை உள்ளடக்கி சுமார் 18,800 சதுர கிலோமீட்டர் (7,259 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. இந்த தீவு எஹைம், ககாவா, கோச்சி மற்றும் டோக்குசிமா ஆகிய நான்கு மாகாணங்களை உள்ளடக்கியது. பரப்பளவின் அடிப்படையில் உலகின் 50 ஆவது பெரியத் தீவாக கருதப்படுகின்றது. சனத்தொகையின் அடிப்படையில் 23 ஆவது இடத்தில் உள்ளது. இந்த தீவின் வடக்கு பகுதியில் 3.8 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். தீவின் பெரும்பாலான மக்களை வடக்குப் பகுதி கொண்டுள்ளது. 1,982 மீ (6,503 அடி) உயரம் கெண்ட இஷிசுச்சி மலை இந்த தீவின் மிகப் பெரிய மலை ஆகும். தீவின் ஒரு சில பெரிய நகரங்களைத் தவிர ஏனையவை வடக்குப் பகுதியில் அமைந்துள்ளன. தீவில் தொழிற்துறை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. பெஸ்ஷி செப்பு சுரங்கத்தில் இருந்து தாதுக்கள் பதப்படுத்தப்படுகின்றன. பரந்த வண்டல் பகுதிகளிலும், கிழக்கு பகுதியிலும் நெற் பயிர்ச்செய்கை நடைப்பெறுகின்றது. பின்னர் குளிர் காலத்தில் கோதுமை, பார்லியுடன் இரட்டை பயிர் செய்கை நடைப்பெறுகின்றது. வடக்குப் பகுதிகளில் நாரத்தை, குழிப்பேரி, திராட்சை உள்ளிட்ட பல வகை பழங்கள் நடப்படுகின்றது. சிக்கொகுவின் தெற்கு மலைப்பகுதி குறைந்தளவு சனத்தொகையை கொண்டது. இத்தீவின் முக்கிய நதி யோசினோ ஆகும். இந்த நதி 196 கி.மீ. (121.8 மைல்) நீளமானது. இது மேற்கு நோக்கி கிழக்கே கொச்சி மற்றும் டோகுஷிமா மாகாணங்களின் வடக்கு எல்லைகளைத் தாண்டி டோக்குஷிமா நகரில் கடலை அடைகிறது. யப்பானின் ஏனைய மூன்று தீவுகளைப் போலன்றி சிகொகுவில் எரிமலைகள் இல்லை.[2]
Remove ads
சனத்தொகை
2015 ஆம் ஆண்டில் சன்தொகை கணக்கெடுப்பின் படி 3,845,534 மக்கள் வசிக்கின்றனர்.[1][3] இந்த தீவுன் மிகப் பெரிய நகரம் மாட்சுயாமா என்பதாகும். மாட்சுயாமா நகரில் 509,835 மக்கள் வாழ்கின்றனர். யப்பானின் சனத்தொகையின் அடிப்படையில் மூன்றாவது பெரிய தீவாகும்.
கலாச்சாரம்
சிகொகு வரலாற்று ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தாவரங்கள் மற்றும் கட்டிடக்கலை நுட்பங்களையும், யப்பானின் பாரம்பரிய நுட்பங்களையும் நீண்ட காலமாக பேணி வருகின்றது. இங்கு பௌத்த விகாரைகள் ஏராளமாக காணப்படுகின்றன. ஆசிசுரி - உவகாய் தேசிய பூங்கா சிகொக்குவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
இந்த தீவு 88 கோயில்களின் யாத்திரைக்கு பிரபலமானது. இந்த யாத்திரை சிகொக்குவைச் சேர்ந்த கோக்காய் என்ற துறவியால் நிறுவப்பட்டது. மேலும் இந்த யாத்திரைக்கு நவீன கால யாத்ரீகர்கள் பேருந்தில் பயணம் செய்கின்றனர். பாத யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் அரிதாகவே உள்ளனர். ஆகத்து மாதத்தில் ஓபன் திருவிழா நடைப்பெறும். இந்ந திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. மேலும் கோச்சியில் யோசோகோய் திருவிழாவும் ஆகத்து மாதத்தில் நடைப்பெறுகின்றது. யப்பான் முழுவதிலும் உள்ள நடனக் கலைஞர்களும் சுற்றுலாப் பயணிகளும் இதில் கலந்துக் கொள்கின்றனர். “உடொன்” என்பது சிகொக்குவின் முதன்மை உணவுகளில் ஒன்றாகும்.[4]
போக்குவரத்து
சிகொக்கு மூன்று அதிவேக நெடுஞ்சாலைகளினால் ஒன்சுத் தீவுடன் இணைக்கப்படுகின்றது. சிகொக்குவில் உள்ள நான்கு மாகாணங்களில் ஒவ்வொன்றிலும் தனியார் ரயில் பாதைகள் இயங்குகின்றன. சிகொக்குவில் முழுமையான பன்னாட்டு விமான நிலையம் இல்லை. ஆனால் நான்கு பிராந்திய / உள்நாட்டு விமான நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்த விமான நிலையங்கள் அனைத்தும் தோக்கியோ உட்பட பிற முக்கிய யப்பானிய நகரங்களுக்கான விமான போக்குவரத்து சேவையை கொண்டுள்ளது. ஒன்சு, கியூசு மற்றும் சிகொக்குவை சுற்றியுள்ள ஏனைய தீவுகளுக்கு படகு சேவை உண்டு.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads