தீக்கல்

From Wikipedia, the free encyclopedia

தீக்கல்
Remove ads

தீக்கல் (Flint) அல்லது சிக்கிமுக்கிக் கல், சிலிக்காவினால் ஆன ஒருவகை படிவுப் பாறை ஆகும். தீக்கல்லானது கடினமான, படிகவடிவு வெளித்தெரியாத (cryptocrystalline) கனிம படிகக்கல்லின் (mineral quartz) படிவு வடிவமாகும்[2][3]. இது ஒருவகையானக் கல்லாக வகைப்படுத்தப்படுகிறது. தீக்கற்கள் படிவுப்பாறைகளில் சுண்ணக்கட்டிகள், சுண்ணப்பாறைகளென முண்டுகளாகவும், திணிவுகளாகவும் காணப்படுகின்றன[4][5].

Thumb
மெர்ஸ்-லெ-பேன் கடற்கரையில் உயர்ந்த அலை நேரத்தில் சுண்ணக்கல் செங்குத்துப் பாறை. கரிய நிறத்திலுள்ள தீக்கல் வரிகளைக் காணலாம்.
Thumb
பஃபலோ, நியூயார்க்கில் ஓணான்டாகா சுண்ணப்பாறைகளிலிருந்து பெறப்பட்ட தீக்கல் முடிச்சு. (3.8 செமீ அகலம்)
Thumb
புனித டிரினிட்டி தேவாலயம், லாங் மெல்ஃபோர்டில் காணப்படும் தீக்கல் கோபுரம்.
Thumb
இங்கிலாந்தின் ஓக்சுனேயிலிருந்து பெறபட்ட தீக்கல் கைக்கோடாரி. இதுவே தொல்லியல் வரலாற்றில் முதலாவதாக பதிப்பிக்கப்பட்ட படிமம்.[1] இந்தக் கைக்கோடாரி ஆயுதமாகப் பயன்படுத்தப்பட வில்லை; இறந்த பெரும் பாலூட்டிகளின் சடலத்திலிருந்து இறைச்சி வெட்ட ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.

வெப்ப மண்டல கடலின் கண்டத் திட்டுகளில் அமைந்துள்ள பிந்தைய கிரட்டேசியசுக் கால பாறைகளான சுண்ணக்கட்டிகளில் பட்டைகளாகத் தீக்கற்கள் கிடைக்கின்றன.

கடலரிப்பால் சுண்ணக்கல் தேயும்போது கடினமான தீக்கல் முடிச்சுகள் கூழாங்கல்லாக தட்டைக்கல் கடற்கரைகளில் காணப்படுகின்றன. இந்தக் கற்கள் பின்னர் பிரிதொரு பாறையாக ஒன்று சேரவும் கூடும். இவ்வாறு இரண்டாம் முறைப் படிவுப் பாறையாக இவை உருவாகின்றன.

Remove ads

காட்சிக் கூடம்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads