சிங்கப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்

From Wikipedia, the free encyclopedia

சிங்கப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்
Remove ads

சிங்கப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதி சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் ஆகும். இது சிங்கப்பூரில் உள்ள பழமையான இந்துக் கோயில்களில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், பெயர் ...
Thumb
சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்
Remove ads

வரலாறு

1855 ஜூலை 20 நரசிங்கம் என்பவருக்கு கிழக்கிந்தியக் கம்பெனியாரால் சிராங்கூன் சாலையில் விற்கப்பட்ட நிலத்தில் நரசிம்ம பெருமாள் கோயில் என்று பெயரில் ஒரு கோயில் கட்டப்பட்டது. நரசிம்ம பெருமாள், மகாலெட்சுமி, ஆண்டாள், ஆஞ்சநேயர் இவர்களுடன் கோவிலின் வெளியில் அரசமரத்தடியில் பிள்ளையார் சிலையையும் வைத்து வழிபட்டு வந்தார்கள்.

இக்கோயில் 1907 முதல் முகமதிய இந்து அறக்கட்டளை வாரியத்தினால் மேலாண்மை செய்யப்பட்டுப் பின்னர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1963-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பிகளைக் கொண்டு சிற்ப வேலை நடைபெற்று இராச கோபுரம், பிள்ளையார் சந்நிதி, இவற்றைத் தவிர தற்சமயமுள்ள கோயில் 1966-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

Remove ads

பெயர் மாற்றம்

நரசிங்கப் பெருமாள் கோவில், ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலாக பெயர் மாற்றம் பெற்றது. நரசிங்க அவதாரம் எடுத்த விஷ்ணுவின் உருவத்திற்குப் பதிலாகத் திருப்பதி வெங்கடேசப் பெருமாளை ஒத்த திருவுருவத்தைக் கோவிலில் மூலவராக வைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் கருஞ்சிலையும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது.

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஒரு கல்யாண மண்டபம் கட்டப்பட்டு, 1965-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் 1966 இல் புதிப்பிக்கப்பட்டு கும்பாபிசேகம் முடிவுற்றவுடன் கோவிலுக்கு இராச கோபுரமும் கட்டப்பட்டது.

நவம்பர் 1978 இக்கோவில் சிங்கப்பூர் தேசிய நினைவு சின்னங்கள் பாதுகாப்பு வாரியத்தால் அரசாங்கத்தால் அங்கீரிக்கப்பட்டது.

கோவில் கோபுரம், விமானத்தில் உள்ள சுதை சிற்பங்களாகத் தாயார், ஆண்டாள், பெருமாள் பொழியுடன் காட்சியளிக்கிறார்கள். சன்னிதானத்தில் மூலவராக பெருமாள், ஆண்டாள், தாயார் ஆகியோரின் உற்சவ திருவுருவங்கள் ஏகாதசி மண்டபத்தில் வைக்கப்பட்டு அன்றாட பூசைகள் நடத்தப்பட்டு வருகிறது. கொடி மரம் இழைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து வந்த செம்புத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது. காரைக்குடியில் உள்ள சிறந்த நுட்பவாதிகளைக் கொண்டு இராசகோபுரத்திற்கான கதவு செய்யப்பட்டுள்ளது.

Remove ads

முக்கிய விழாக்கள்

  • புரட்டாசிச் சனி
  • வைகுண்ட ஏகாதசி - இந்நாளில் இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்துப் பெருமாளை வழிபடுவது வழக்கம். மறுநாள் காலை சொர்க்கவாசல் திறக்கப்படும்.சொர்க்கவாசல் திறந்து தரிசனம் செய்த பிறகே பக்தர்கள் தங்கள் விரத்தை முடிப்பார்கள்.இவ்விழா 1900கள் தொடக்கம் முதல் நடைபெற்று வருகிறது.

வெளி இணைப்புகள்

வெளி இணைப்புகள்


  • புவியியல் ஆள்கூறுகள் - (1.3133°N 103.8561°E / 1.3133; 103.8561)
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads