சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள்

தமிழ் பிராமணர் From Wikipedia, the free encyclopedia

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள்
Remove ads

தீட்சிதர்அல்லது தில்லைவாழ் அந்தணர் என்பவர் தமிழ்நாட்டின் வேத சைவ பிராமண சமூகமாகும். அவர்கள் முக்கியமாக சிதம்பரம் நகரத்தின் நடராசர் கோயிலை மையமாகக் கொண்டவர்கள்; அவர்கள் முதலில் சோழ சாம்ராஜ்யத்தில் சடங்கு செய்பவர்களாக இருந்தனர். சடங்கு முறையில் அடுத்தடுத்த மன்னர்களுக்கு முடிசூட்டினர். தென்னிந்தியாவில் ஸ்மார்த்த (குறிப்பாக வடமாக்கள் ), ஸ்ரீ வைஷ்ணவர் மற்றும் பிற பிராமணர்களும் தீட்சிதர்கள் என்ற குடும்பப் பெயரைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த தீட்சிதர்கள் சிதம்பரம் தீட்சிதர்களிடம் இருந்து வேறுபட்டவர். [1]

விரைவான உண்மைகள் தீட்சிதர், வகைப்பாடு ...

அவர்கள் வேதங்கள் மற்றும் யாகங்கள் ஆகியவற்றைக் கற்ற பிராமணர்களின் பிரத்யேக குழுவாகும். அவர்கள் சிதம்பரத்தில் நடராசர் கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாகவும் பணியாற்றுகிறார்கள். அவர்கள் தில்லை மூவாயிறவையர் என அழைக்கப்படுகின்றனர்.[2] திருமணமான ஒவ்வொரு தீட்சிதரும் சிதம்பரம் நடராசர் கோயிலின் அறங்காவலர் ஆகவும் அர்ச்சகர் ஆகவும் உரிமை பெறுகிறார். கேரளாவின் நம்பூதிரி பிராமணர்களைப் போலவே இவர்களும் தலைக்கு முன்னால் முன்குடுமி போட்டுக் கொள்கின்றனர்.[3]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads