சித்ரலேகா (ஓவியர்)

பாகவத புராணத்தில் காணப்படும் கதை மாந்தர் From Wikipedia, the free encyclopedia

சித்ரலேகா (ஓவியர்)
Remove ads

சித்ரலேகா ( Chitralekha) பாகவத புராண மாந்தரான உஷாவின் தோழியும், வாமன அவதாரத்தின் போது, வாமனரால் பாதளத்திற்கு தள்ளப்பட்ட அசுரரான மகாபலி சக்கரவர்த்தியின் மகனான பாணாசுரனின் அமைச்சரையில் அமைச்சராக இருந்தவரின் மகளும் ஆவார். உஷாவை அவளது காதலன் அனிருத்தனுடன் இணைக்க இவள் தன் மந்திர சக்திகளைப் பயன்படுத்துகிறாள். [1]

விரைவான உண்மைகள் சித்ரலேகா (ஓவியர்), நூல்கள் ...

அனிருத்தனைப் பாணாசூரன் மகள் உஷா மையல் கொண்டு கவர்ந்து சென்றாள். தன் பேரனை காணாத கிருஷ்ணர், பின்னர் நடந்தவற்றை அறிந்து, பாணாசூரனிடம் தன் பேரனை விடுவிக்கக் கோரினார். அதனை மறுத்த பாணாசூரனிடம் போரிட்டு, அவனது ஆயிரம் கைகளில் இரண்டைத் தவிர மற்றவைகளை கிருஷ்ணர் வெட்டி விடுகிறார்.[2][3][4][5][6] இதனால் துவாரகை தரப்பிற்கும், அசுரர் தரப்பிற்கும் போர் நிகழ்ந்தது. பாணாசுரன் சிறந்த சிவபக்தனாதலால் இது சிவனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையிலான போராயிற்று. இறுதியில் சிவனே கிருட்டிணன். கிருஷ்ணனே சிவன் என்ற தத்துவம் உணர்த்தப்பட்டு, அனிருத்தனுக்கும், உஷாவுக்கு திருமணம் நடைபெற்றது. [7]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads