துவாரகை

From Wikipedia, the free encyclopedia

துவாரகை
Remove ads

துவாரகை அல்லது துவாரகா என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அரபுக்கடற் கரையில் அமைந்த பண்டைய நகரமாகும். யது குல அரசர்கள் ஆண்ட ஆனர்த்த நாட்டின் தலைநகரான துவாரகையை, கிருட்டிணன் புதிதாக அமைத்ததாக நம்பப்படுகின்றது. முக்தி தரும் ஏழு நகரங்களில் துவாரகை நகரம் ஒன்றாக உள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருத்துவாரகை இங்கு அமைந்துள்ளது குறிக்கத்தக்கது. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான துவாரகை மடம் இங்கு அமைந்துள்ளது. மேலும் துவாரகை சிந்துவெளி நாகரீக தொல்லியல் களங்களில் ஒன்றாக உள்ளது. [1] [2]

விரைவான உண்மைகள் துவாரகை દ્વારકા, நாடு ...
Remove ads

துவாரகை என்பதன் பொருள்

துவாரகையை துவாரவதி என்றும் அழைப்பர். துவாரகை என்பதற்கும் துவாராவதி என்பதற்கும் சமஸ்கிருத மொழியில் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள். மகாபாரதத்தில் துவாரகை, யது குலத்தின் ஒரு பிரிவான விருஷ்ணிகள் ஆண்ட ஆனர்த்த இராச்சியத்தின் தலைநகராக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில் துவாரகை

Remove ads

துவாரகை தொல்லியல் அகழ்வாய்வுகள்

1963ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், துவாரகையின் கடற்கரையிலும், கடலிலும் தொல்லியல் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொண்டதில் பழம்பெரும் நகரத்தின் தொல்பொருட்களை கண்டெடுத்து ஆய்வு செய்தது.[3] கடல் பகுதியில் இரண்டு இடத்தில் தொல்லியல் அகழ்வாய்வு செய்ததில் பண்டைய இந்தியாவின் மத்திய கால இராச்சியங்களில் ஒன்றான துவாரகை நகரமும், துறைமுகமும் மண் அரிப்பால் கடலில் மூழ்கியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. [4]வல்லபியை தலைநகராக் கொண்டு, ஆனர்த்த இராச்சியத்தை ஆண்ட மன்னர் சிம்மாதித்தியன் கிபி 574ல் வெளியிட்ட செப்புப் பட்டயத்தில் துவாரகை நகரத்தை குறித்துள்ளது. துவாரகை அருகே உள்ள பேட் துவாரகை இந்துக்களின் புனிதத் தலமாகவும், கிமு 1570 காலத்திய, பிந்தைய அரப்பா தொல்லியல் களங்களில் ஒன்றாக உள்ளது. [5]

நிலவியல்

சௌராஷ்டிர தீபகற்பத்தில் புதிதாக துவக்கப்பட்ட தேவபூமி துவாரகை மாவட்டத்தின், கட்ச் வளைகுடாவின் கழிமுகத்தில், கோமதி ஆற்றின் வலது கரையில் துவாரகை நகரம் அமைந்துள்ளது. [6]

போக்குவரத்து

துவாரகையின் சாலைகள், தொடருந்து நிலையம்[7] நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கிறது. அருகில் உள்ள விமான நிலையம், துவாரகையிலிருந்து 131 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாம்நகர் விமான நிலையம் ஆகும்.[8]

மக்கள்பரம்பல்

2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி துவாரகை நகரத்தின் மக்கள் தொகை 38,873 ஆகும்.[9][10]). மக்கள் தொகையில் ஆண்கள் 53%; பெண்கள் 47%. மொத்த எழுத்தறிவு 72%. அதில் பெண்கள் எழுத்தறிவு 55%. மொத்த மக்கள் தொகையில், ஆறு வயதிற்குரிய குழந்தைகள் எண்ணிக்கை 13% ஆகும்.[9]

தட்பவெப்ப நிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், துவாரகை, மாதம் ...
Remove ads

ஆன்மீகத் தலங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads