சித்ரா (மலையாளம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சித்ரா (Chithra; 21 மே 1965-21 ஆகத்து 2021) மலையாளத் திரைத்துறையில் தனது பங்களிப்பிற்காக நன்கு அறியப்பட்ட ஓர் இந்திய நடிகை ஆவார்.[4][5] இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1983ஆம் ஆண்டில் தனது முதல் படமான ஆட்டகலசம் படத்தில் பிரேம் நசீர் மற்றும் மோகன்லால் ஆகியோருடன் நடித்தார்.[6] இவர் நடித்த ஓர் எண்ணெய் நிறுவனத்தின் விளம்பரத்தின் மூலம் பெற்ற புகழ் காரணமாக இவருக்கு "நல்லெண்ணெய் சித்ரா" என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது.[7]
Remove ads
வாழ்க்கை வரலாறு
1965ஆம் ஆண்டில் கொச்சி மாதவன் மற்றும் தேவிக்குப் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார், சித்ரா. இவருக்குத் தீபா என்ற அக்காவும், திவ்யா என்ற தங்கையும் உள்ளனர். இவர் சென்னை இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.[8] பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், திரைப்பட வாய்ப்பு அதிகமாக வந்ததால் தனது படிப்பைத் தொடர முடியவில்லை.
1990ஆம் ஆண்டு விஜயராகவனை மணந்தார். இவர்களுக்கு 1992-இல் மகாலட்சுமி என்ற மகள் பிறந்தார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் தனது குடும்பத்துடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். இவர் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.[9] இவர் 21 ஆகத்து 2021 அன்று சென்னையில் திடீர் மாரடைப்பால் இறந்தார்.[10]
தமிழ்த் திரைப்படங்கள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads