புத்தம் புது பயணம்

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

புத்தம் புது பயணம்
Remove ads

புத்தம் புது பயணம் 1991 ஆவது ஆண்டில் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பி. சௌத்ரி தயாரித்த இத்திரைப்படத்தில் ஆனந்த் பாபு, விவேக், சின்னி ஜெயந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சௌந்தர்யன் இசையமைத்த இத்திரைப்படம் 1991 நவம்பர் 22 அன்று வெளியானது.[1][2] இப்படம் தெலுங்கில் சிரஞ்சீவுலு என்ற பெயரில் மீளுருவாக்கம் செய்யப்பட்டது.

விரைவான உண்மைகள் புத்தம் புது பயணம், இயக்கம் ...
Remove ads

கதைச் சுருக்கம்

விவேக் (விவேக்), நாராயணன் (சின்னி ஜெயந்த்), கண்ணன் (கண்ணன்) மூவரும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த ஊரின் பெரிய தொழிலதிபரின் மகனான பாபுவும் (ஆனந்த் பாபு) இவர்கள் தங்கியிருக்கும் மருத்துவமனைக்கு வந்து இவர்களது அறையிலேயே தங்குகிறார். இவர்கள் நால்வருக்கும் ரத்தப் புற்றுநோய் இருப்பதால் இவர்கள் இன்னும் சில மாதங்களே உயிரோடு இருக்க முடியும் என்பதை அறிந்து கொள்கின்றனர். அவர்கள் நால்வரும் நல்ல நண்பர்களாக ஆகிறார்கள். அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறி, சிவலிங்கத்தின் (கே. எஸ். ரவிக்குமார்) பிடியில் இருக்கும் ஒரு கிராமத்தை அடைகிறார்கள். சிவலிங்கத்தின் பிடியில் இருந்து அந்த கிராமத்து மக்களை காப்பாற்றினார்களா அவர்கள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பினார்களா என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.

Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை எழுதி இப்படத்திற்கு இசையமைத்தவர் சௌந்தர்யன் ஆவார்.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads