சின்ன வாத்தியார்

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

சின்ன வாத்தியார்
Remove ads

சின்ன வாத்தியார் (Chinna Vathiyar) சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் பிரபு, குஷ்பு, ரஞ்சிதா, நிழல்கள் ரவி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்து 1995-இல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் வாலி எழுத இளையராஜா இசையமைத்தார். இப்படம் 1984-இல் தெலுங்கு மொழியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ஒரு படத்தின் மறு ஆக்கமாகும்.[2][3] ஆரம்பத்தில் இப்படத்திற்கு "புரபசர்" என ஆங்கிலத்தில் பெயரிட்டு, பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க சின்ன வாத்தியார் எனப் பெயரிடப்பட்டது.[4]

விரைவான உண்மைகள் சின்ன வாத்தியார், இயக்கம் ...
Remove ads

கதைச் சுருக்கம்

இப்படத்தில் பிரபு இரு வேடங்களில் நடித்துள்ளார். ஒரு உடலிருந்து மற்றொரு உடலுக்கு ஆன்மாவைக் கடத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் சந்திரமெளலி என்பவரைப் பற்றிச் சொல்லும் கதையாகும். சந்திரமெளலி ஜானகி என்பவரைத் (குஷ்பு) திருமணம் செய்து கொண்டு அரவிந்த் (இன்னொரு பிரபு) என்ற மாணவனின் உதவியுடன் ஆராய்ச்சியை நடத்தி வருகிறார். பேராசிரியர் மற்றும் அரவிந்த் ஆகியோர்களின் ஆத்மாக்களும் இடமாற்றம் செய்யப்பட்டதால், அவர்களின் மனைவிகளுக்குள் ஏற்படும் சங்கடங்களைக் கொண்டு கதை தொடங்குகிறது.

இதற்கிடையில், பாபா என்ற போக்கிரி (நிழல்கள் ரவி) பேராசிரியரின் ஆராய்ச்சி மாணவியைக் கடத்தி ஒரு போக்கிரி கும்பலுக்கு விற்றுவிடுகிறான். இதைக் கேள்விப்பட்ட பேராசிரியர் அரவிந்தனுக்குள் தன் ஆன்மாவை நுழைத்து அம்மாணவியை காப்பாற்றுகிறார். காவல்துறையிடம் மாட்டிக்கொண்ட பாபா அங்கிருந்து தப்பி விடுகிறான். ஆன்மா மாறிவிட்ட பேராசிரியரும் அரவிந்தனும் அவர்களது ஆன்மாக்களை பழையபடி மாற்றியமைக்க ஒரு கல்லறைக்கு வருகின்றனர்.

அங்கே வந்த பாபா இந்த அதிசய வித்தையை மறைந்திருந்து பார்க்கிறான். அங்கே பேராசிரியரின் ஆன்மா மீண்டும் அவரது உடலுக்குள் சென்றுவிடுகிறது. ஆனால் அரவிந்தனுடைய ஆன்மா அங்கு கிடந்த பூனையின் உடலுக்குள் சென்றுவிடுகிறது. மறைந்திருந்த பாபா விரைவாக வந்து பேராசிரியரைத் தாக்கிவிட்டு, தனது ஆன்மாவை அரவிந்தின் உடலுக்கு மாற்றிக்கொள்கிறான். அரவிந்தனின் ஆத்மாவுடன் உள்ள பூனையை அருகிலுள்ள ஒரு கிணற்றில் போட்டுவிட்டு, அதிசய மருந்துடன் தப்பி ஓடிவிடுகிறான்.

அரவிந்தனுக்குள் புகுந்த பாபா மிகவும் வித்தியாசமாக நடந்துகொண்டு பல கெட்ட செயல்களில் ஈடுபடுகிறான். இறுதியாக, மயக்கம் தெளிந்த பேராசிரியர் நடந்ததைப்பற்றி அறிந்து புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த அதிசய மருந்தினைக் கண்டுபிடித்து விடுகிறார். இறுதிக்காட்சியில் நடக்கும் சில நிகழ்வுகளுக்குப் பின்னர் கடைசியாக அரவிந்தனின் ஆன்மா பூனைவிடமிருந்து விடுதலை செய்யப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு வருகிறது. முடிவாக, பாபாவின் ஆன்மா கோழிக்குள் சிக்கிக் கொள்கிறது. இவ்வாறு கதை முடிகிறது.

இப்படத்தின் இடையில் கவுண்டமணியின் இருதார திருமணத்தை வைத்து, செந்தில், கோவை சரளா நடித்த சில நகைச்சுவை காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

Remove ads

நடிகர், நடிகையர்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளைக் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[5][6]

மேலதிகத் தகவல்கள் பாடல், பாடியோர் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads