உமா ரமணன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உமா ரமணன் (Uma Ramanan, 1954/1955 – 1 மே 2024[1]) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் 35 ஆண்டுகளில் 6,000 இற்கும் மேற்பட்ட மேடைக் கச்சேரிகளில் பல பாடல்களைப் பாடினார்.[2]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
உமா படித்துக் கொண்டிருந்தபோதே, பழனி விஜயலட்சுமியிடம் பாரம்பரிய இசையைக் கற்றார். உமா பல கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளில் பங்கேற்றதுடன் பல வெகுமதிகளையும் பாராட்டுகளையும் வென்றார். பின்னர் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகரும், மேடைப் பாடகருமான ஏ. வி. இரமணனைச் சந்தித்தார்.[2] அப்போது இரமணன் தனது மேடைக் கச்சேரிகளுக்காக புதிய குரல்களைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போதிருந்து, உமாவும் இரமணனும் இரட்டை மேடைக் கலைஞர்களாக மாறினர். இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். அவரும் ஒரு இசைக்கலைஞராவார்.
உமா இரமணன் பத்மா சுப்பிரமணியத்திடம் பயிற்சி பெற்ற நடனக் கலைஞரும் ஆவார்.[3] உமா இரமணன் 2024 மே 1 அன்று தனது 69 வது வயதில் இறந்தார்.[4]
Remove ads
பின்னணிப் பாடகியாக
இரமணனின் மேடை நிகழ்ச்சிகளில் உமா பாடிக்கொண்டிருக்கும்போது, பிரபலத் தயாரிப்பாளரும்-ஒளிப்பதிவாளருமான ஜானகிராமன் 1976 இல் வெளிவந்த தனது இந்தித் திரைப்படமான "பிளே பாய்" திரைப்படத்தில் இருவருக்கும் சோடிப் பாடலை வழங்கினார். 1977 இல் ஏ. பி. நாகராஜன் இயக்கிய "ஸ்ரீ கிருஷ்ண லீலா" என்ற தமிழ்த் திரைப்படத்திலும், இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் கடைசிப் பணிகளில் ஒன்றிலும் பாடுவதற்கான வாய்ப்பு இந்த இணையருக்குக் கிடைத்தது. 1980 இல் ஏ. வி. ரமணன் இசையமைத்த நீரோட்டம் திரைப்படத்தில் உமா பாடினார். இருப்பினும், அதே ஆண்டில் இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தில் "பூங்கதவே தாழ் திறவாய்" பாடல் தான் இவரை முன்னணி பாடகிகளின் பட்டியலில் கொண்டு வந்தது. இது அவருக்கு ஒரு பெரிய தொழில் வாய்ப்பை அளித்தது. மேலும் உமா இளையராஜாவுடன் தனியாக 100 இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவு செய்தார்.[2] வித்தியாசாகர், தேவா, மணிசர்மா போன்ற இசையமைப்பாளர்களுக்காகவும் இவர் பாடினார்.
Remove ads
இளையராஜாவின் இசையில் பாடிய பாடல்கள்
உமா இரமணனும் இவரின் சமகாலத்தவர்கள் சிலரும் இளையராஜாவின் வாழ்க்கையில் அரிதானவர்களாகப் கருதப்படுகிறார்கள். உமா தனது தொழில் வாழ்க்கையில் இளையராஜாவின் இசையமைப்பில் சிறந்த பாடல்கள் சிலவற்றை பதிவு செய்துள்ளார்.[5]
இளையராஜாவின் இசையில் உமா இரமணனின் முக்கிய வெற்றிப் பாடல்கள் சில:
- 1980 – "பூங்கதவே தாழ் திறவாய்" (நிழல்கள்)
- 1980 – "ஆசை இராஜா ஆரிரோ" (மூடுபனி)
- 1981 – "ஆனந்த இராகம்" (பன்னீர் புஷ்பங்கள்)
- 1981 – "மஞ்சள் வெயில்" (நண்டு)
- 1981 – "அமுதே தமிழே" (கோவில் புறா)
- 1981 – "வானமே மழை மேகமே" (மதுமலர்)
- 1981 – "தாகம் எடுக்கிற நேரம்" (எனக்காக காத்திரு)
- 1981 – "பள்ளி அறைக்குள்" (பால நாகம்மா)
- 1982 – "பூபாளம் இசைக்கும்" (தூறல் நின்னு போச்சு)
- 1983 – "செவ்வந்தி பூக்களில்" (மெல்ல )
- 1983 – "செவ்வரளி தோட்டத்திலே" (பகவதிபுரம் இரயில்வே கேட்)
- 1983 – "ஆத்தாடி அதிசயம்" (மனைவி சொல்லே மந்திரம்)
- 1984 – "கஸ்தூரி மானே கல்யாணத் தேனே" (புதுமைப்பெண்)
- 1984 – "காதில் கேட்டது ஒரு பாட்டு" (அன்பே ஓடி வா)
- 1984 – "மேகங் கருக்கையிலே" (வைதேகி காத்திருந்தாள்)
- 1985 – "கண்மணி நீ வரக்" (தென்றலே என்னைத் தொடு)
- 1985 – "பொன் மானே" (ஒரு கைதியின் டைரி)
- 1986 – "யார் தூரிகை" (பாரு பாரு பட்டணம் பாரு)
- 1990 – "நீ பாதி நான் பாதி" (கேளடி கண்மணி)
- 1990 – "ஆகாய வெண்ணிலாவே" (அரங்கேற்ற வேளை)
- 1990 – "உன்ன பார்த்த நேரத்தில" (மல்லுவேட்டி மைனர்)
- 1994 – "ஊரடங்கும் சாமத்திலே" (புதுபட்டி பொன்னுதாயி)
- 1994 – "ஸ்ரீ ரங்க ரங்க நாதனின்" (மகாநதி)
- 1995 – "நில் நில் நில் பதில்" (பாட்டு பாடவா)
- 1995 – "வெள்ளி நிலவே" ("நந்தவனத்தேரு")
- 1995 – "பூச்சூடும்" ("ஆணழகன்")
இவர் பாடிய பாடல்களில் சில
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads