அரக்கான் இராணுவம்

From Wikipedia, the free encyclopedia

அரக்கான் இராணுவம்
Remove ads

அரக்கான் இராணுவம் (Arakan Army), மியான்மர் நாட்டில் ஏப்ரல் 2009 முதல் மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக இராகினி மாநிலத்தில் செயல்படும் ஐக்கிய அரக்கான் லீக்கின் ஆயுதக் குழுவாகும். இராகினி மாநிலத்திற்கு தன்னாட்சி கோரும் [15] இந்த ஆயுதக் குழுவின் படைத் தலைவராக மேஜர் ஜெனரல் வான் ராத் நயிங் செயல்படுகிறார். 2020ல் மியான்மர் அரசு இந்த ஆயுதக் குழுவை பயங்கரவாத அமைப்பு என அறிவித்துள்ளது. [16] ஜுந்தா இராணுவ அரசு இக்குழுவை 2024ல் பயங்கரவாத அமைப்பு எனக்கூறி தடைசெய்துள்ளது.[17]

விரைவான உண்மைகள் அரக்கான் இராணுவம், தலைவர்கள் ...
Thumb
அரக்கான் இராணுவத்தில் கட்டுப்பாட்டில் மியான்மரின் தென்மேற்கிலுள்ள ராகினி மாநிலத்தின் பகுதிகள் (சிவப்பு நிறத்தில்)

பிப்ரவரி 2024ல் அரக்கான் இராணுவத்தில்38,000 படையினர் உள்ளதாக கூறப்படுகிறது.[18] [19] சில வல்லுநர்கள் சின்லாந்து மற்றும் இராகினி மாநிலத்தில் 15,000 போராளிகளும்; காசின் மாநிலம் மற்றும் சான் மாநிலத்தில் 1,500 போராளிகள் மட்டும் உள்ளதாக மதிப்பீடு செய்துள்ளனர்.

ஏற்கனவே இராகினி மாநிலத்தின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளை கைப்பற்றிய அரக்கான் இராணுவம்[20], டிசம்பர் 2024ல் மியான்மர்-வங்காளதேசத்தின் எல்லையை ஒட்டிய வங்காளதேசத்தின் தெக்னாப் பிராந்தியத்தை கைப்பற்றியது.[21]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads