சிபு மாவட்டம்
சரவாக் மாநிலத்தில் ஒரு மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிபு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Sibu; ஆங்கிலம்: Sibu District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சிபு பிரிவில்; ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாக மையமாக சிபு நகரம் (Sibu Town) விளங்குகிறது.[1]

இந்த மாவட்டத்தில் இராஜாங் ஆறு; இகான் ஆறு எனும் இரு பெரும் ஆறுகள் சங்கமிக்கின்றன. மாநிலத் தலைநகரான கூச்சிங் நகரின் வடகிழக்கில் ஏறக்குறைய 191.5 கிமீ (119 மைல்) தொலைவில் சிபு மாவட்டம் அமைந்துள்ளது.[2]
சிபு மாவட்டத்தில் சீனர்கள் மிகுதியாக உள்ளனர்; குறிப்பாக பூச்சௌ (Fuzhou Chinese) சீன வம்சாவளியைச் சேர்ந்த சீனர்கள். அத்துடன் இபான் (Iban) இன மக்கள், மலாய்க்காரர்கள் (Malay) மற்றும் மெலனாவ் (Melanau) இன மக்கள் போன்ற பிற இனக் குழுவினரும் உள்ளனர்.
Remove ads
பொது
சிபு மாவட்டத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
- சிபு நகரப் பகுதி (Sibu Town Area) (129.5 கிமீ2);
- சிபு கிராமப்புற பகுதி (Sibu Rural Area) (2,100.3 கிமீ2).
சிபு நகரத்தில் சிபு இசுலாமிய வளாகம் எனும் நிர்வாக மையம் உள்ளது. அங்குதான் சிபு மாவட்ட அலுவலகம் உள்ளது.
நிர்வாக மன்றங்கள்
- சிபு நகரத்தை சிபு நகராட்சி மன்றம் (Sibu Municipal Council) நிர்வாகம் செய்கிறது.
- சிபு கிராமப்புறப் பகுதிகளை சிபு கிராமப்புறம் - மாவட்ட ஊராட்சி மன்றம் (Sibu Rural District Council) நிர்வாகம் செய்கிறது.
இந்த இரண்டு நகராட்சி, ஊராட்சி மன்றங்களுக்கும் தனித்தனியான மாவட்ட அலுவலகங்கள்; தனித்தனியான மாவட்ட அதிகாரிகள் உள்ளனர்.[3]
Remove ads
மக்கள் தொகையியல்
1991 முதல் 2000 வரை, சிபு மாவட்ட மக்கள்தொகையில் 2.36% ஓரளவிற்கு வளர்ச்சி; 2000 முதல் 2010 வரை, 1.53% ஓரளவுக்கு வளர்ச்சி இருந்தது.[4]
வரலாறு

1850-ஆம் ஆண்டுகளில் சிபு மாவட்டத்தில் தயாக் மக்களின் (Dayak People) கடல் கொள்ளைகள் பரவலாக இருந்தன. அதனால் வெளியூர் மக்கள் அங்கு வந்து வணிகம் செய்தற்குத் தயக்கம் காட்டினர். அடிக்கடி நிகழ்ந்து வந்த கடல் கொள்ளைககளையும்; அடிக்கடி நிகழ்ந்து வந்த தயாக் மக்களின் தாக்குதல்களையும் தவிர்க்க, ஜேம்சு புரூக் (James Brooke), சிபு நகரில், 1862-ஆம் ஆண்டில் ஒரு கோட்டையைக் கட்டினார்.
அதனைத் தொடர்ந்து, சீனர்களின் (Chinese Hokkien) ஒரு சிறிய குழுவினர், சிபு கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியில் குடியேறினார்கள். அதுவே சிபுநகரில் திட்டமிடப்பட்ட முதல் குடியேற்றம் என அறியப்படுகிறது.[5][6]
பெரிய அளவிலான குடிபெயர்வு
1901-ஆம் ஆண்டு, சிபுவின் புதிய குடியேற்றப் பகுதிக்குள் ஓங் நய் சியோங் (Wong Nai Siong) என்பவரின் தலைமையில் சீனாவின் புசியான் மாநிலத்தில் (Fujian) இருந்து 1,118 பூச்சௌ சீனர்கள் (Fuzhou Chinese) ஒரு பெரிய அளவிலான குடிபெயர்வை மேற்கொண்டனர். இந்த நிகழ்வு, சிபுவில் "நியூ புசூ" என்று பிரபலமாகக் குறிப்பிடப் படுகிறது.[7][8]
1930-களில் சிபுவின் முதல் சந்தையான சிபு பசார் (Sibu Bazaar); மற்றும் சிபுவின் முதல் மருத்துவமனையான சிபு மருத்துவமனை (Sibu Hospital) எனும் லு கிங் ஆவ் மருத்துவமனை (Lau King Howe Hospital), ஜேம்சு புரூக் நிர்வாகத்தின் போது கட்டப்பட்டவையாகும். கிறித்துவ சமயம் சார்ந்த பல மெதடிசு பள்ளிகள் (Methodist Schools) மற்றும் தேவாலயங்களும் கட்டப்பட்டன.[9][10]
சிபு செயா
சிபு புறநகர்ப் பகுதியில் ஒரு புதிய நகரம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் பெயர் சிபு செயா (Sibu Jaya). சிபு நகரில் இருந்து 26 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[11]
மற்றும் சிபு வானூர்தி நிலையத்தில் (Sibu Airport) இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது. 1995-இல் சிபுவின் துணை நகரமாக உருவாக்கப்பட்டது. 2023-இல் நிறைவு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.[12][13]
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads