சிமுஞ்சான் மாவட்டம்

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சிமுஞ்சான் மாவட்டம்
Remove ads

சிமுஞ்சான் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Simunjan; ஆங்கிலம்: Simunjan District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில், சமரகான் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். செரியான் மற்றும் செரி அமான் ஆகிய நகரங்களுக்கு இடையே இந்த மாவட்டம் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் சிமுஞ்சான் மாவட்டம் Simunjan DistrictDaerah Simunjan, நாடு ...

சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங்கின் தென்-கிழக்கே 51.4 கிலோமீட்டர் (32 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தின் எல்லையில் செபுயாவ் மற்றும் சமரகான் நகரங்கள் எல்லைகளாக உள்ளன.

இந்த மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் மலாய் மக்கள் மற்றும் இபான் மக்கள். பத்தாங் சாடோங் ஆறு சிமுஞ்சான் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறு ஆகும்.

Remove ads

பொது

சிமுஞ்சான் அதன் பெயரை "பூரோங் முஞ்சான்" (Burung Munjan) எனும் பறவையில் இருந்து பெற்றது. முஞ்சான் பறவைகள் சிமுஞ்சான் பகுதிகளுக்குச் சொந்தமான ஒரு பறவை என அறியப்படுகிறது. இந்தப் பறவைகள் நெகேலி மலைக்காடுகளில் (Gunung Ngeli) அதிகமாக இருந்தன.[2]

முஞ்சான் பறவையின் சிலை 1990-ஆம் ஆண்டு சிமுஞ்சான் நகரத்தின் மைய மைதானத்தில் நிறுவப்பட்டது. சிமுஞ்சான் பகுதிகளில் மனித நடமாட்டம் அதிகமாக இருந்ததால் முஞ்சான் பறவைகள் அழிந்துவிட்டதாகவும் நம்பப்படுகிறது.[3]

Remove ads

மேலும் காண்க

காலநிலை

சிமுஞ்சான் வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் மிக அதிக மழைப்பொழிவைக் கொண்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், சிமுஞ்சான், மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads