சியாச்சின் பனியாறு

From Wikipedia, the free encyclopedia

சியாச்சின் பனியாறு
Remove ads

சியாச்சின் பனியாறு (Siachen Glacier) இமாலய மலைகளில் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் (35.421226°N 77.109540°E / 35.421226; 77.109540) உள்ளது. இது இந்திய-பாக்கித்தான் எல்லைக்கோடு முடியும் என்.ஜெ.9842 என்ற இடத்துக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது. 70 km (43 mi) தொலைவிற்கு அமைந்துள்ள இந்தப் பனியாறு காரகோரம் பகுதியிலேயே மிக நீண்டதும் உலகின் வட-தென் முனைகளில் அல்லாதவற்றில் நீளமான பனியாறுகளில் இரண்டாவதும் ஆகும்.[1] பனியாற்றின் உச்சிப்பகுதியான சீன எல்லையில் உள்ள இந்திரா கணவாயில் இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5,753 மீ (18,875 அடி) ஆகும், பனியாற்றின் அடிவாரத்தில் இதன் உயரம் 3,620 மீ (11,875 அடி) ஆகும்.

Thumb
சியாச்சென் பனியாற்றின் செய்மதிக் காட்சி

சியாச்சின் பனியாறானது ஆசிய ஐரோப்பிய நிலத்தட்டையும் இந்திய துணைக்கண்டத்தையும் பிரிக்கும் காரகோர மலைத்தொடரின் தெற்குப்பகுதியிலுள்ள சிறப்பு வாய்ந்த பனியாற்றின் பெரும் வடிகால் பரப்பில் அமைந்துள்ளது. இப்பகுதி சில சமயம் உலகின் மூன்றாவது முனை என்றும் அழைக்கப்படுகிறது.

Remove ads

சியாச்சின் பிணக்கு

சியாச்சின் பனிமலை உரிமை தொடர்பாக இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே மார்ச் 1984 முடிய சியாச்சின் பிணக்கு நீடித்து வநதது. 1984ல் மேகதூது நடவடிக்கை மூலம் இந்திய இராணுவம் சியாச்சின் கொடுமுடியைக் கைப்பற்றி லடாக்குடன் இணைத்தது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads