சியாமா சரண் சுக்லா

From Wikipedia, the free encyclopedia

சியாமா சரண் சுக்லா
Remove ads

சியாமா சரண் சுக்லா (Shyama Charan Shukla)(27 பிப்ரவரி 1925 14 பிப்ரவரி 2007)[1] ஒரு இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி மற்றும் மூன்று முறை மத்தியப் பிரதேச முதல்வர் ஆவார்.

விரைவான உண்மைகள் சியாமா சரண் சுக்லா, 7வது முதலமைச்சர் ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

சியாமா சரண் சுக்லா 27 பிப்ரவரி 1925 அன்று ராய்ப்பூரில் கன்னியாகுப்ஜா பிராமண குடும்பத்தில் பிறந்தார்.[2] இவரது தந்தை இரவிசங்கர் சுக்லா ஒரு வழக்கறிஞர், மத்திய மாகாணங்கள் மற்றும் பெரரின் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி மற்றும் மத்தியப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக இருந்தார். இவரது தம்பி வித்தியா சரண் சுக்லாவும் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதியாகவும், மத்திய அமைச்சராகவும், மக்களவையில் ஒன்பது முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

இவரது மகன் அமிதேசு சுக்லா ஒரு இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி மற்றும் தற்போது சத்தீசுகரின் இராஜிம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3]

Remove ads

அரசியல் வாழ்க்கை

சியாமா சரண் சுக்லா முதன்முதலில் 1957-ல் ராஜீமிலிருந்து மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962, 1967, 1972, 1990, 1993 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் இதே தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 1977-ல் இராஜீமிடம் தோற்றார்.

சுக்லா 1969-72, 1975-77 மற்றும் 1989-90 ஆகிய மூன்று சந்தர்ப்பங்களில் மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக பணியாற்றினார்.[1][3]

1999-ல், சுக்லா மகாசமுண்டிலிருந்து மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2004 வரை பணியாற்றினார்.[3]

Remove ads

நினைவு

2012-ல் சுக்லா படம் அச்சிடப்பட்ட அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டது.

வெளி இணைப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads