சிர்க்கோனியம்(VI) சிலிக்கேட்டு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிர்க்கோனியம் சிலிக்கேட்டு (Zirconium silicate) என்பது ZrSiO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிர்கோனியம் ஆர்த்தோ சிலிக்கேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. சிர்க்கோனியத்தின் சிலிக்கேட்டு உப்பான இச்சேர்மம் இயற்கையில் சிர்க்கோன் என்ற சிலிக்கேட்டு வகைக் கனிமமாகக் கிடைக்கிறது. இக்கனிமம் சிலசமயங்களில் சிர்க்கோன் மாவு என்றும் அறியப்படுகிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...

வழக்கமாக சிர்க்கோனியம் சிலிக்கேட்டு ஒரு நிறமற்ற சேர்மமாகும். இதனுடன் சேர்ந்துள்ள மாசுக்களைப் பொருத்து இதன் நிறம் வேறுபடுகிறது. தண்ணீர், அமிலம், காரம் மற்றும் இராச திராவகம் போன்ற கரைப்பான்களில் சிர்க்கோனியம் சிலிக்கேட்டு கரைகிறது.தனிமங்களின் கடினத்தன்மையை அளக்க உதவும் மோவின் அளவுகோலில் 7.5 என்ற அளவு கடினத்தன்மையைக் கொண்டுள்ளது.[1]

Remove ads

தயாரிப்பு

இயற்கையில் சிர்க்கோன் என்ற சிலிக்கேட்டு வகைக் கனிமமாகக் சிர்க்கோனியம் சிலிக்கேட்டு கிடைக்கிறது. இயற்கைப் படிவுகளில் சுரங்கமாகக் கிடைக்கும் இதன் தாதுப் பொருள் பல்வேறு தொழில்நுட்ப முறைகள் மூலமாக செறிவூட்டப்படுகிறது. நிலைமின் மற்றும் மின்காந்த முறைகளில் மணலில் இருந்தும் தனித்துப் பிரித்தெடுக்கப்படுகிறது.

மின்வில் உலையில் SiO2 மற்றும் ZrO2 முதலான சேர்மங்களை சேர்ப்பு வினை முறையில் வினைபுரியச் செய்து அல்லது நீர்க்கரைசலில் உள்ள சோடியம் சிலிக்கேட்டுடன் ஒரு சிர்க்கோனியம் உப்பைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் இச்சேர்மத்தைத் தயாரிக்கலாம்.

Remove ads

பயன்கள்

எங்கெல்லாம் காரச் சேர்மங்கள் மூலம் உண்டாகும் அரிப்பைத் தடுக்கும் தேவை ஏற்படுகிறதோ அத்தகைய இடங்களில் பயன்படுத்தப்படும் அனல் எதிர்ப்புப் பொருட்கள் உற்பத்தியில் சிர்க்கோனியம் சிலிக்கேட்டு பயன்படுத்தப்படுகிறது. சில பீங்கான் வகைகள், மிளிரிகள் மற்றும் பீங்கான் மெருகுகள் தயாரிப்பிலும் இச்சேர்மம் பயன்படுகிறது. மிளிரி மற்றும் மெருகூட்டிகளில் இது ஒளிபுகுதலை தடுக்கும் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. சில சிமெண்ட் வகைகளிலும் இச்சேர்மம் பகுதிப்பொருளாகக் காணப்படுகிறது. அரவை இயந்திரங்களில் அரைக்கும் மணிகளாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். வேதியியல் ஆவி படிதல் முறையில் தயாரிக்கப்பட்ட சிர்க்கோனியம் சிலிக்கேட்டு மற்றும் ஆஃபினியம் சிலிக்கேட்டு மென்படலங்கள், குறைக்கடத்திகளில்[2] பயன்படுத்தப்படும் சிலிக்கன் ஈராக்சைடுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிர்க்கோனியம் சிலிக்கேட்டு சில மருத்துவப் பயன்களையும் கொண்டிருக்கிறது. உதாரணமாக ZS-9 என்ற சிலிக்கேட்டு உணவுப்பாதையில் உள்ள பொட்டாசியம் அயனிகளை அடையாளம் காண்பதற்குப் பயனாகிறது.[3].

Remove ads

நச்சுத்தன்மை

தோல் மற்றும் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கும் ஒரு வேதிப்பொருளாக சிர்க்கோனியம் சிலிகேட் உள்ளது. நுரையீரல் கட்டி. தோல் அழற்சி, மற்றும் தோலில் சிறு கட்டிகள் ஏற்படுத்தும் பண்பையும் பெற்றிருக்கிறது.[4] எனினும், சாதாரணமாக அல்லது தற்செயலாக உள்ளெடுத்துக்கொள்ளுதலால்[5] ஏற்பட்ட பாதகமான விளைவுகள் ஏதும் அறியப்படவில்லை.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads