இராச திராவகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராச திராவகம் (Aqua regia, இலத்தீன்: "royal water", அல்லது aqua regis, "king's water"), அல்லது நைட்ரோ-ஐதரோகுளோரிக் அமிலம் (nitro-hydrochloric acid) என்பது அடர் நைதரிக் அமிலமும், ஐதரோகுளோரிக் அமிலமும் புதியதாக 1:3 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டு உருவாக்கப்படும் வேதிக் கலவை ஆகும். அமிலங்களின் கலவையான இத்திரவம் புகையும் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்துடன் மிகவும் அரிப்புத்தன்மை கொண்டதாக விளங்குகிறது. விலை உயர்ந்த அரிய உலோகங்களான தங்கம், பிளாட்டினம் முதலியவற்றை கரைக்கும் வலிமை கொண்டிருப்பதால் இதை இராச திராவகம் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். எனினும், தைட்டானியம், இரிடியம், உருத்தேனியம், தாண்டலம், நையோபியம் ஆஃபினியம், ஓசுமியம், உரோடியம் மற்றும் தங்குதன் போன்ற உலோகங்கள் இராச திராவகத்தின் அரிக்கும் பண்பை எதிர்த்து நிற்கும் திறன் படைத்து உள்ளன[1] .


Remove ads
பயன்கள்
இராச திராவகம் முதன்மையாக இடைநிலை தங்கமான குளோரோ ஆரிக் அமிலம் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இக்குளோரோ ஆரிக் அமிலம் வோல்வில் முறையில் தங்கம் தயாரிக்கும் போது மின்பகுளியாகச் செயல்படுகிறது. இந்தச் செயல்முறை மிக உயர்ந்த தரமான (99.999%) தங்க சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படுவதாகும்.
உருச்செதுக்கல் மற்றும் குறிப்பிட்ட சில பகுப்பாய்வு நடைமுறைகளில் இராச திராவகம் பயன்படுத்தப் படுகிறது. மேலும் ஆய்வகங்களில் கரிம சேர்மங்களின் கண்ணாடிப் பொருட்களையும் உலோகத் துகள்களையும் தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. நிறமாலையைக் கெடுக்கும் இணைகாந்த குரோமியத் துகள்கள் எஞ்சியிருக்கலாம் என்பதால்[2], அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலையியலில் பயன்படுத்தப்படும் மெல்லிய கண்ணாடிக் குழாய்களைத் (NMR TUBES) தூய்மைப்படுத்த பாரம்பரிய குரோமிக் அமிலக் குளியலான இம் முறைக்கு முன்னுரிமை தரப்பட்டது. அதே சமயம் குரோமிக் அமிலக் குளியல் குரோமியத்தின் அதிக நச்சுத்தன்மை மற்றும் வெடிக்கும் பண்பு காரணமாக ஊக்குவிக்கப் படுவதில்லை. சரியாகக் கையாளப் படாமல் அரிக்கும் பண்பு கொண்ட இராச திராவகமும் பல வெடிப்புகளுக்கு காரணமாகிறது.[3].
இராச திராவகத்தில் உள்ள பகுதிப் பொருட்கள் தங்களிடையே புரியும் வினை காரணமாக இது விரைவில் சிதைவடைந்து வலிமையான அமிலமாக இருந்தாலும் அதன் தனித்தன்மையை இழந்து நிற்கிறது. எனவேதான் அதன் பகுதிப் பொருட்கள் புதியதாக கலக்கப் பட்டவுடன் பயன்படுத்தப்படுகிறது . ஆனால் நடைமுறையில் , இராச திராவகம் அதில் கரைந்துள்ள உலோகங்களால் மாசு அடைந்திருக்குமேயானால் அது கழிவுத் தொட்டியில் கொட்டுவதற்கு முன்னர் கவனமாக நடுநிலைப் படுத்தப்படுகிறது[4][5].
Remove ads
வேதியியல்
மேலும் காண்க
குறிப்புகள்
- The information in the infobox is only accurate if the volume ratio of நைட்ரிக் காடி to ஐதரோகுளோரிக் காடி is 1:3.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads