சிர்சா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிர்சா (Sirsa) மேற்கு இந்தியாவின் அரியானா மாநிலத்தின் அமைந்த சிர்சா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் புதுதில்லிக்கு வடமேற்கில் 260 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான சண்டிகரிலிருந்து 240 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்நகரம் 29.53°N 75.02°E பாகையில் உள்ளது. இந்நகரத்தின் கீழ் சரசுவதி ஆறு பாய்ந்ததாக இந்து தொன்மவியல் கூறுகிறது. இந்நகரத்தில் இந்திய விமானப்படையின் தளம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 9, இந்தியா இந்நகரத்தின் வழியாகச் செல்கிறது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 36,191 வீடுகள் கொண்ட சிர்சா நகரத்தின் மக்கள்தொகை 1,82,534 ஆகும். அதில் ஆண்கள் 96,175 மற்றும் பெண்கள் 86,359 ஆக உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20,825 ஆகும் சராசரி எழுத்தறிவு 72.1% ஆகவுள்ளது. பட்டியல் சமூகத்தினரின் எண்ணிக்கை 39,208 ஆகவுள்ளது.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads