சிர்சா மாவட்டம்
அரியானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிர்சா மாவட்டம் (Sirsa district) வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சிர்சா நகரம் ஆகும்.சிர்சா நகரம் புதுதில்லியிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
Remove ads
அமைவிடம்
சிர்சா மாவட்டத்தின் வடக்கில் பதிண்டா மாவட்டம் (பஞ்சாப்), வடகிழக்கில் மான்சா மாவட்டம், தென்கிழக்கில் பதேகாபாத் மாவட்டம், தென் மேற்கில் முக்த்சர் சாகிப் மாவட்டம் எல்லைகளாக கொண்டது.
பொருளாதாரம்
சிர்சா மாவட்டம், இந்தியாவின் 250 மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கான மானிய உதவி பெறும் மாவட்டங்களில் ஒன்றாகும். [1]
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் சிர்சா, தாப்வாலி, ரானியா மற்றும் எல்லனாபாத் என நான்கு வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது. ஊரக வளர்ச்சிக்கான சிர்சா, தாப்வாலி, ரானியா, எல்லனாபாத், நாதுசரி சோப்டா, ஒதான் மற்றும் பராகுத்தா என ஏழு ஊராட்சி ஒன்றியங்களை உடையது. இந்த மாவட்டம் காலன்வாலி, தாப்வாலி, ரானியா, சிர்சா மற்றும் எல்லனாபாத் என ஐந்து சட்டமன்ற தொகுதிகளையும், சிர்சா நாடாளுமன்ற மக்களவை தொகுதியும் கொண்டது.
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1295189 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 975941 மக்களும்; நகரப்புறங்களில் 319248 மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 24.64% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 682582 ஆண்களும் மற்றும் 612607 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 897 பெண்கள் வீதம் உள்ளனர். 4277 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் 303 வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 68.82% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 76.43% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 60.40% ஆகவும் உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 387381 ஆக உள்ளது. [2]
மொழிகள்
அரியானா மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் வட்டார மொழியான அரியான்வியும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads