சிறீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஸ்ரீ பத்மாவதி மகிளா விஸ்வாவித்யாலயம் (சிறீ பத்மாவதி பல்கலைக்கழகம்) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் உள்ள பெண்கள் பல்கலைக்கழகம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

தோற்றம்

பெண்களுக்கான தொழில்முறை கல்வியை வழங்குவதற்காக 1983இல் ஆந்திர சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் மாநில இந்தப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது. வெங்கடாசலபதியின் துணைவியார் பத்மாவதி தேவியின் பெயரானது இப்பல்கலைக்கழகத்திற்கு இடப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் சுமார் 3,000 மாணவர்கள் கல்விப் பயில்கின்றனர். இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆந்திராவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் கல்வி பயில வருகின்றனர்.[1] இந்தப் பல்கலைக்கழகம் வளர்ச்சிக்கான நிதியினை பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் மாநில அரசிடமிருந்து பெறுகிறது. தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை ”ஏ” தர அங்கீகாரம் பெற்ற இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் துவ்வுரு ஜமுனா 2020ஆம் ஆண்டு சனவரியில் நியமிக்கப்பட்டார்.

Remove ads

துறைகள் & பாடங்கள்

ஸ்ரீபத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் இணைப்பு கல்லூரிகள் இல்லாத பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்தில் 16 துறைகளில் 52 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில் ஐந்து முதுகலை பட்டயப்படிப்பு, நான்கு இளங்கலை, 16 முதுநிலை, 14 ஆய்வியல் நிறைஞர், மற்றும் 14 முனைவர் திட்டங்கள் உள்ளன. கல்வியில் மந்தமான மாணவர்களுக்காகப் பரிகாரக் கற்பித்தல் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கான முன் தேர்வு பயிற்சியினையும் இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது. முதுகலையில் ஊடக மேலாண்மை, ஒருங்கிணைந்த (ஐந்தாண்டு) உயிர்த்தொழில்நுட்பவியல், இளங்கலை உடற்கல்வி மற்றும் உயிர்த்தகவல் நுட்பவியல் போன்ற வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய புதிய படிப்புகளை வழங்குகின்றது. இப்பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி முறையில் படிப்புகளையும் வழங்குகிறது.[2]

அறிவியல் பள்ளி

  • பயன்பாட்டு கணிதம்
  • பயன்பாட்டு நுண்ணுயிரியல்
  • உயிர்தொழில்நுட்பவியல்
  • கணினி அறிவியல்
  • மனையியல்
  • கரிம வேதியியல்
  • இயற்பியல்
  • பட்டுப்புழுவளர்ப்பு
  • புள்ளியியல்

சமூக அறிவியல்

  • வணிக மேலாண்மை
  • தகவல் தொடர்பு மற்றும் ஊடகவியல்
  • கல்வி
  • ஆங்கில மொழி மற்றும் இலக்கியம்
  • சட்டம்
  • இசை மற்றும் நுண்கலை
  • உடற்கல்வி
  • சமூக பணி
  • தெலுங்கு ஆய்வுகள்
  • மகளிரியல்
  • பொதுக் கொள்கை & மானுடவியல்

செவிலியம்

மருத்துவம் சார்ந்த பிறபடிப்புகள்

பொறியியல் கல்வி

Remove ads

வளாகம்

சிறீபத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் திருமலை அடிவாரத்தில் நகர்ப்புற பகுதியில் 138 ஏக்கர் (56 ஹெக்டேர்) பரப்பளவில் அமைந்துள்ளது.

பன்னாட்டு ஆய்வித் திட்டங்கள்

இந்த பல்கலைக்கழகம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய அமைப்புகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது. வெளிநாட்டு மேம்பாட்டு நிர்வாகத் திட்டத்தின் மூலம் ஆந்திர மாநில உயர்கல்வி குழு மற்றும் இங்கிலாந்து குழுவும், இங்கிலாந்தின் லாக்பரோ பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்வித் துறையுடன் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தினைச் செயல்படுத்துகிறது. வணிக மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் துறையுடன் பெண்கள் தொழில்முனைவோர் மேம்பாடு திட்டத்தினை, கனடாவின் யுனிவர்சிட்டி டி மான்ட்ரியல் நிறுவனத்துடன் செயல்படுத்துகிறது. பட்டுப்புழு வளர்ப்பில் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக சீன அரசாங்கத்துடன் பரிமாற்ற திட்டத்தினையும் செயல்படுத்தி வருகின்றது.

மேலும் பல துறைகள் பன்னாட்டு ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில், ஜாக்ஜிக் பல்கலைக்கழகம், எகிப்து- பட்டு வளர்ப்பு மற்றும் கணினி அறிவியல் துறையிலும் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சமூகப் பணித் துறையுடன் இளம் ஆய்வியல் அறிஞர் ஆராய்ச்சி திட்டத்தினையும் நெதர்லாந்து, ஹான்ஸ் பல்கலைக்கழகம், பயன்பாட்டுக் கணிதம் துறையுடனும், அமெரிக்க பென் மாநில பல்கலைக்கழகம், பயன்பாட்டு நுண்ணுயிரியல் துறையுடனும், டெக்சாஸ் பல்கலைக்கழகம், உயிர்த்தொழில்நுட்பவியல் துறையுடனும், இங்கிலாந்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகம், சமூகப் பணித் துறையுடனும், ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசிபிக் பயிற்சி தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான மையம் பெண் தொழில்முனைவோருக்கான பயிற்சி மையத்துடனும், கனடாவின் கல்கரி பல்கலைக்கழகம், உயிர்த்தொழில்நுட்பத் துறையுடனும், இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகம், மகளிர் ஆய்வுகள் துறையுடனும், ஜெர்மனியின் வர்ஸ்பர்க் பல்கலைக்கழகம், மகளிர் ஆய்வுகள் மையத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டுவருகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads