தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை (National Assessment and Accreditation Council, NAAC) அல்லது என்ஏஏசி இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு தரவரிசைப்படுத்தும் ஓர் அமைப்பாகும். இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் நிதியில் தன்னாட்சியுடன் இயங்கும் இந்த அமைப்பு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...
Remove ads

வரலாறு

1986இல் இயற்றப்பட்ட தேசிய கல்விக் கொள்கைப் பரிந்துரைக்கேற்ப 1994ஆம் ஆண்டு இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இந்தக் கல்விக் கொள்கையின் நோக்கம் கல்வியின் தரக் குறைபாடுகளை களைவதாகும். 1992ஆம் ஆண்டில் செயலாக்கத் திட்டம் வடிக்கப்பட்டு தனியதிகாரம் கொண்ட தேசிய தரவரிசைப்படுத்தும் அமைப்பொன்றை நிறுவ தொலைநோக்கு திட்டம் தீட்டப்பட்டது. [2] இதன்படி, என்ஏஏசி 1994ஆம் ஆண்டு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.

Remove ads

தரச்சான்று முறைமை

என்ஏஏசியிடமிருந்து தரச்சான்று பெறுவது மூன்றுநிலை செயல்பாடாகும். முதல்நிலையில் தரப்படுத்தப்படும் நிறுவனம் தயார்படுத்திக்கொண்டு சுய ஆய்வு அறிக்கையை தருவதாகும். இதனைப் பதிப்பித்தபிறகு நேரடியாக இணைநிலை அணியொன்று சுய அறிக்கைப்படி உள்ளதா என ஆய்்ந்து பரிந்துரை அளித்தல் இரண்டாம்நிலை ஆகும். மூன்றாம் நிலையில் என்ஏஏசியின் செயற்குழு இறுதி முடிவெடுப்பதாகும்.

தர நிலை

தர ஆய்வு முடிவில் உயர் கல்வி நிறுவனங்கள் ஆங்கில் எழுத்தின் அடிப்படையில் 4 தரப்புள்ளிகளுக்கு நிறுவனங்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தரப்படுத்தப்படுகின்றன.[3]

மேலதிகத் தகவல்கள் நிறுவன கூடுதல் தரப்புள்ளிகள், எழுத்து வகைப்பாடு ...

அங்கீகாராம்

சூன் 2023 நிலவரப்படி, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், 820 பல்கலைக்கழகங்களும் 15501 கல்லூரிகளும் இந்த அவையினால் அங்கீகாரம் பெற்றுள்ளன.[4]

முடிவுகள்

11 மார்ச் 2020 முதல் செல்லுபடியாகும் அங்கீகாரத்துடன் கூடிய உயர்கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பட்டியலை தேமதஅ வெளியிட்டது.[5]

மேலதிகத் தகவல்கள் பல்கலைக்கழகம், மாநிலம் ...
மேலதிகத் தகவல்கள் கல்லூரிகள், மாநிலம் ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads