சிலிகான் டைசல்பைடு

From Wikipedia, the free encyclopedia

சிலிகான் டைசல்பைடு
Remove ads

சிலிக்கான் சல்பைடு (Silicon sulfide)  SiS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும்.   சிலிக்கான் டை ஆக்சைடைப் போல இந்தப் பொருளும் ஒரு பலபடித்தன்மை வாய்ந்ததாகும். ஆனால் இது மற்ற சிலிக்காவின் வடிவங்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்ட 1-பரிமாண வடிவத்தைக் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தொகுப்புமுறை, அமைப்பு, மற்றும் பண்புகள்

இச்சேர்மமானது கந்தகத்தையும், சிலிக்கானையும் வெப்பப்படுத்துவதன் மூலமாக அல்லது SiO2 மற்றும் Al2S3 இவற்றுக்கிடையேயான பரிமாற்ற வினையின் மூலமாகவோ தயாரிக்கப்படலாம். இந்தச் சேர்மமானது முனையங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்ட நான்முகி, Si(μ-S)2Si(μS)2 ஆகியவற்றைக் கொண்ட சங்கிலியமைப்பைக் கொண்டுள்ளது.[2]

மற்ற சிலிக்கான் கந்தக சேர்மங்களைப் போல  (உ.ம்., பிஸ்(டிரைமெதில்சிலைல்)சல்பைடு) SiS2 எளிதில் நீராற்பகுக்கப்பட்டு  H2S ஐ வெளியிடுகிறது. திரவ அம்மோனியாவில் இச்சேர்மம் இமைடு Si(NH)2 மற்றும் NH4SH ஐத் தருகிறது.[3] ஆனால், தற்போதைய ஆய்வு முடிவு ஒன்று படிக நான்முகி வடிக தயோசிலிகேட்டு எதிரயனியைக் (SiS3(NH3)) கொண்டுள்ள  (NH4)2[SiS3(NH3)]·2NH3  விளைபொருளாகக் கிடைப்பதாகத் தெரிவிக்கிறது.SiS3(NH3).[4]

எத்தனால் உடனான வினையானது அல்காக்சைடு, டெட்ராஎதில்ஆர்த்தோசிலிகேட்டு மற்றும் ஐதரசன் சல்பைடைத் (H2S) தருகிறது. சோடியம் சல்பைடு, மக்னீசியம் சல்பைடு மற்றும் அலுமினியம் சல்பைடு உடனான வினைகளானவை தயோசிலிகேட்டுகளைத் தருகின்றன.

அண்டத்தில் குறிப்பிட்ட விண்மீன்களுக்கிடையேயுள்ள பொருட்களில் SiS2 காணப்படுவதாக அறியப்படுகிறது.[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads