சில்வியா கார்ட்ரைட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டேம் சில்வியா ரோசு கார்ட்ரைட்டு (Dame Silvia Rose Cartwright, திருமணம் முன்பு: பவுல்டர், பிறப்பு: 7 நவம்பர், 1943) நியூசிலாந்தின் 18வது தலைமை ஆளுநராகப் பொறுப்பில் இருந்தவர்.
ஒடாகோ பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற இவர் 1967இல் ஒடாகோ பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் இளங்கலைப்பட்டம் பெற்றுள்ளார். சில்வியா கார்ட்ரைட் கம்போடியாவிலுள்ள சிறப்பு நீதிமன்ற கழகத்தின் தலைவரும் பெண்களுக்கு எதிராக வேற்றுமை காட்டுதலை ஒழிப்பதற்கான ஐ.நா குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.[1]
இலங்கையின் வடபகுதியில் விடுதலைப் புலிகளுடனான இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.[1][2]
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads