சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
2018 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (Sivaranjiniyum Innum Sila Pengalum) என்பது 2021 ஆம் ஆண்டு வசந்த் எஸ் சாய் இயக்கிய இந்திய தமிழ்த் தொகுப்புத் திரைப்படமாகும்.
படத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பாடல்கள் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி வடிவமைத்த ஒலிகளைக் கொண்டுள்ளது. படத்தின் தயாரிப்பு 2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது. 2018இல் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இறுதியாக மேலதிக ஊடக சேவை தளமான SonyLIV மூலம் வெளியிடப்பட்டது. திரையரங்கு வெளியீட்டைத் தவிர்த்தது.[1]
Remove ads
கதைச் சுருக்கம்
அசோக மித்திரன் (விமோசனம்), ஆதவன் (ஓட்டம்), ஜெயமோகன் (தேவகி சித்தியின் நாட்குறிப்பு) ஆகிய எழுத்தாளர்கள் எழுதிய மூன்று பெண்களை மையமாகக் கொண்ட சிறுகதைகள் இந்தத் திரைப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளன.[2] லட்சுமி பிரியா சந்திரமெளலி, பார்வதி மேனன், காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நடிகர்கள்
- சிவரஞ்சனியாக லட்சுமி பிரியா சந்திரமெளலி
- தேவகி பார்வதி மேனன்
- சரஸ்வதியாக காளீஸ்வரி சீனிவாசன்
- சந்திரனாக கருணாகரன்
- மணியாக சுந்தர் ராமு
- ஹரியாக கார்த்திக் கிருஷ்ணா
- ஜி. மாரிமுத்து
- செந்தில்குமாரி
- ஹம்ரேஷ்
- நேத்ரா
- ரமா
- ஈஸ்வரி
- இராஜா ராணி பாண்டியன்
- விளையாட்டு பயிற்சித் துறைத் தலைவராக லிசி ஆண்டனி
- வழக்கு எண் முத்துராமன்
- ரேச்சல் ரெபேக்கா
- இராஜ்மோகன்
- சீனு மோகன்
- சாய்ராம் விஷ்வா
- வாலி மோகன் தாஸ்
- விஜயா பாட்டி
தயாரிப்பு
படத்தின் தயாரிப்பு பணிகள் சனவரி 2015இல் தொடங்கியது. இயக்குநர் வசந்த் எஸ் சாய், பார்வதி மேனன், நடிகர் கருணாகரன் ஆகியோர் நடிக்கும் புதிய படத்திற்கான பணிகளைத் தொடங்கினார்.[3] பெண்களை மையமாகக் கொண்ட படம் என்று வசந்த் குறிப்பிட்டார். தனது மறைந்த வழிகாட்டியான கே. பாலச்சந்தருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார். பாலச்சந்தர் தனது படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களை அடிக்கடி சித்தரித்தார். எழுத்தாளர்கள் ஜெயமோகன், ஆதவன், அசோகமித்திரன் ஆகியோர் பெண்களை மையமாகக் கொண்ட எழுதிய மூன்று சிறுகதைகள் இந்தப் படத்தில் படமாக்க இருப்பது தெரியவந்தது.[4][5]
செப்டம்பர் 2015 இல் பூஜா குமார் இடம்பெறும் காட்சிகளை வசந்த் படமாக்கினார். ஆனால் பின்னர் திரைக்கதையை மாற்றி அந்த நடிகையை திட்டத்தில் இருந்து நீக்கினார்.[6] தீபன் (2015) திரைப்படத்தின் முன்னணி நடிகையான காளீஸ்வரி சீனிவாசனும் 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்க நியமிக்கப்பட்டார்.[7] ஆகஸ்ட் 2016 இல், படம் "எழுபது சதவிகிதம்" முடிந்ததாக வசந்த் தெரிவித்தார்.[8] நவம்பர் 2017இல், பார்வதி படத்தின் வேலைகளை முடித்துவிட்டதாகவும், 1990களின் முற்பகுதியில் பணிபுரியும் பெண்ணாக நடிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தப் படம் சிறிய தொகையில் எடுக்கப்பட்டதாகவும், பெரிய படத்தொகுப்பைக் காட்டிலும் ஒரே அறையில் ஆக்கப் பணிகள் நடந்ததாகவும் வசந்த் கூறினார்.[9] சல்சன் ஜோஸ் டால்பி அட்மாஸ் கலவை பொறியாளராகப் பணியாற்றினார்.
வெளியீடு
சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் திரையரங்குகளில் வெளிவருவதைத் தவிர்த்துவிட்டன. ஆனால் 26 நவம்பர் 2021 அன்று SonyLIV இல் வெளியானது.[10][11]
வரவேற்பு
தி இந்து, இயக்குநர் வசந்த் "மூன்று காலகட்டங்களில் பெண்களின் மனதில் ஆழமாக ஆழமாக ஊடுருவும் ஒரு சக்திவாய்ந்த தொகுப்பை உருவாக்கியுள்ளார்" என எழுதியது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா படத்தைப் பாராட்டி 5க்கு 4.0 மதிப்பீட்டை வழங்கி, "அற்புதமாக தயாரிக்கப்பட்டுள்ளது" எனவும் எழுதியது.[12]
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads