மேலதிக ஊடக சேவை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மேலதிக ஊடக சேவை அல்லது ஓடிடி தளம் (Over-the-top media service) என்பது இணைய வழி நேரடி நுகர்வோர் பார்வையாளருக்காக வழங்கப்படும் ஊடக ஓடை சேவையாகும். இது கம்பி வடத் தொலைக்காட்சி, புவிப்புறத் தொலைக்காட்சி, செய்மதித் தொலைக்காட்சி போன்றவற்றில் இருந்து வேறுபடுகின்றது.[1] இந்த சேவையை பயன்படுத்தபடும் சந்தாதாரர்களிடமிருந்து மாதம் அல்லது வருட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.[2] இந்த தளத்தில் நேரடியாகவோ அல்லது விநியோகஸ்தர் மூலமாகவோ திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஒளிபரப்படுகின்றது.[3][4][5] தற்பொழுது நெற்ஃபிளிக்சு, சன் நெக்ட்ஸ், எம்எக்ஸ் பிளேயர், டிஸ்னி+, ஜீ5, ஹாட் ஸ்டார், போன்ற பல ஓடிடி தளங்கள் பல மொழிகளில் இயங்கி வருகிறது.

Remove ads

உள்ளடக்க வகைகள்

ஓடிடி தொலைக்காட்சி பொதுவாக நிகழ்நிலை தொலைக்காட்சி அல்லது இணைய தொலைக்காட்சி அல்லது ஊடக ஓடை தொலைக்காட்சி என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் பிரபலமான ஓடிடி உள்ளடக்கமாக உள்ளது. இந்த சமிக்ஞை இணையம் அல்லது கைப்பேசி வலைப்பின்னல் மூலம் பெறப்படுகிறது.[6]

ஓடிடி செய்தி என்பது கைபேசி வலைப்பின்னல் மூலமாக வழங்கப்படும் இணைய உரையாடல் செய்தி சேவை ஆகும். இது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட நிகழ்நிலை அரட்டை என வரையறுக்கப்படுகிறது.[7][8] எடுத்துக்காட்டாக: முகநூல், வாட்சப், வைபர், ஃபேஸ்டைம், இசுகைப், டெலிகிராம் போன்றவையாகும்.[9]

ஓடிடி குரல் அழைப்பு என்பது கைபேசி வலைப்பின்னல் மூலமாக வழங்கப்படும் திறந்த இணைய தொடர்பு சேவை ஆகும். எடுத்துக்காட்டாக: இசுகைப், வைபர், வாட்சப் போன்றவையாகும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads