சிவா (நடிகர்)

இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia

சிவா (நடிகர்)
Remove ads

சிவா ராமகிருஷ்ணன் (Siva Ramakrishnan , பிறப்பு: டிசம்பர் 10, 1982) திரைப்பட நடிகர் ஆவார். திரைபடங்களில் நடிப்பதற்கு முன் ரேடியோ மிர்ச்சியில்[2][3][4][5][6][7] வானொலி அறிவிப்பாளராகப் பணியாற்றினார். காமெடி திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் வெங்கட் பிரபு வின் சென்னை 600028 மற்றும் சரோஜா திரைப்படம் மூலம் பிரபலமானார். இவர் 2010- ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். பின்னர் தமிழ் படம் 2.0 என்கிற திரைப்படத்தில் நடித்தார்.[8]

விரைவான உண்மைகள் சிவா, பிறப்பு ...
Remove ads

திரைப்பட வாழ்க்கை

மிர்ச்சி சிவா 12 பி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். வெங்கட் பிரபு 2007ம் ஆண்டு இயக்கிய விளையாட்டை மையமாக் கொண்ட காமெடி திரைப்படமான சென்னை 600028 ல் நடித்த 10 அறிமுக கதாநாயகர்களுல் ஒருவராக நடித்திருந்தார். பின்பு வெங்கட் பிரபு வின் அடுத்த த்ரில்லர் படமான சரோஜா வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இரண்டு படங்களும் வியாபார ரீதியில் மிக பெரிய வெற்றியை பெற்றது.

அடுத்து மிர்ச்சி சிவா நடித்தது சமகால தமிழ்த் திரைப்படங்களை கிண்டல் செய்து வெளியான தமிழ் படம். 2010ல் வெளிவந்த வா குவார்ட்டர் கட்டிங் சராசரி வசூலைப் பெற்றது. சிவா நடித்து நீண்ட நாட்களுக்கு பின் வெளியான காதலை மையமாக கொண்ட பதினாறு படம் 2011 ல் வெளியானது. இந்த காலகட்டத்தில் சிவா நடித்து ராம நாராயணன் இயக்கிய முழு நீள காமெடி திரைப்படமான சிவ பூஜையில் கரடி படம் என்று பெயரிடப்பட்டு முழுமையடைந்து திரைக்கு வராமலே இருக்கிறது.[9] 2012ல் விமலுடன் இணைந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த கலகலப்பு திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வணிக ரீதியுலும் மிகப் பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தில் சிவாவின் கதாபாத்திரமான சிறிய திருட்டுகளை செய்யும் ரகு கதாபாத்திரம் பழைய படங்களில் நடித்ததையே நியாபக படுத்துவதாக விமர்சகர்கள் கருதினார்கள்.[10][11] முந்தைய படங்களின் தொடர் வெற்றியால் 2013ம் ஆண்டு புது கதையம்சம் கொண்ட 4 புதுபடங்களில் சிவா ஒப்பந்தம் ஆனார். ஏற்கனவே 1981ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெற்றிபடமான தில்லுமுல்லு மறுபதிப்பில் சிவாவுடன், ஈஷா தல்வார் ஜோடி சேர பிரகாஷ் ராஜ் நடித்த தில்லுமுல்லு 2013-ம் ஆண்டு முதல் படமாக அமைந்தது. இதில் சிவா மட்டுமே முழு படத்தையும் தன் தோளில் சுமக்கும் அளவுக்கு தன் முழு திறமையையும் வெளிபடுத்தியிருந்தார் என அனைவராலும் பாராட்டப்பட்டார். சரியான நேரத்தில் ஒரு வார்த்தையில் நகைச்சுவை செய்வது சிவாவின் சிறப்பு.[12][13] இதே ஆண்டு வெளியான சொன்னா புரியாது திரைப்படத்தில் பிண்னனி பேசும் கலைஞராக நடித்திருந்தார். தி ஹிந்து பத்திரிக்கையில் சுதிஷ் காம்நாத் இறுகிய முகத்தை வைத்து கொண்டு இவ்வளவு அழகாக காமெடி செய்வதில் சிவாவை மிஞ்ச ஆள் இல்லை, சிவா ஒரு வேடிக்கையான மனிதர் அதை தவிர வேறொன்றும் முக்கியமில்லை என குறிப்பிட்டிருந்தார்.[14] சிவாவின் அடுத்த வெளியீடான யா யா வில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிவாவின் அடுத்த படமான வணக்கம் சென்னையில் பிரியா ஆனந்துடன் ஜோடி சேர கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அடுத்து ஒரு வருடம் கழித்து பாபி சிம்ஹா வுடன் இணைந்து நடித்து வெளிவந்த மசாலாபடத்திற்கு நேர்மறை விமர்சனமும், சிவா நடிப்புக்கு பாராட்டும் கிடைத்தது. 2007 ல் மிகப்பெரிய வெற்றியடைந்த சென்னை 600028 இன் இரண்டாம் பாகத்திலும் சிவா நடித்துள்ளார்.[15]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

பூப்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான வீராங்கனை பிரியா வை 15 நவம்பர் 2012 ம் ஆண்டு காதலித்து மணம் முடித்து கொண்டார்.[16]

நடிகராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

பாடலாசிரியராக

பாடகராக

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads