சி. எஸ். சேஷாத்ரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சி. எஸ். சேஷாத்ரி (C. S. Seshadri) ஒரு சிறந்த இந்திய கணிதவியலாளர் ஆவார். அல்ஜீப்ரா ஜியோமிதி ஆய்வில் ஈடுபட்டு வருபவர் ஆவார். சென்னை கணிதவியல் கழகத்தின் இயக்குநர். இவ்வாய்வகம் தொடங்கப்படுவதற்கு அவரே காரணமாகவும் இருந்தவர். இயற்கணித வடிவவியலில் பல ஆய்வுக்கட்டுரைகள் படைத்திருக்கிறார். அவர் பெயரில் கணிதத்தில் சேஷாத்ரி மாறிலி என்ற ஒரு நிலைப்பி உள்ளது.
கல்வி
காஞ்சிபுறத்தில் பிறந்தவரான இவர் படித்தது செங்கல்பட்டு செயிண்ட் ஜோசப் பள்ளி[1] சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ.ஹானர்ஸ் பட்டமும், மும்பையிலுள்ள டாட்டா அடிப்படை ஆய்வகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
தொழில்
சிறப்பழைப்புப் (வருகைப்) பேராசிரியர்
- பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்.
- ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ்
- கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சலஸ்
- பிராண்டிஸ் பல்கலைக்கழகம்.
- பான் பல்கலைக்கழகம். ஜெர்மனி
- கியோட்டோ பல்கலைக்கழகம், ஜப்பான்
விருதுகளும் பரிசுகளும்
- சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது.
- ஸ்ரீனிவாஸ ராமனுசன் மெடல் (இந்தியன் அறிவியல் அகடெமி)
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
- ராயல் சொஸைட்டி ஃபெல்லோ
- இந்தியன் அறிவியல் அகடெமி ஃபெல்லோ
- இந்திய தேசீய அறிவியல் அகடெமி ஃபெல்லோ
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads