சீபூத்தீ (நகரம்)

From Wikipedia, the free encyclopedia

சீபூத்தீ (நகரம்)
Remove ads

சீபூத்தீ நகரம்(அரபி: جيبوتي, அல்லது ஜீபூத்தீ நகரம் எனப்படுவது French: Ville de Djibouti, சோமாலி: Magaalada Jabuuti, அபர: Gabuuti), சிபூட்டி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தஜோரா வளைகுடாவில் கடற்கரைப் பகுதியான சிபூட்டி பிரதேசத்தில் அமைந்துள்ளது. சுமார் 600,000 மக்கள் தொகையைக் கொண்ட இந்நகரில் நாட்டின் மக்கட்டொகையில் அறுபது வீதமானோர் வசிக்கின்றனர். 1888 இல் ஆட்சி புரிந்த சோமாலிய, அபார் சுல்தான்களிடமிருந்து பிரெஞ்சுக்காரர்களால் குத்தகைக்குப் பெறப்பட்ட பிரதேசத்தில் இந்நகரம் அமைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் நாடு, பிரதேசம் ...

அமைவிடத்தின் அடிப்படையில் ஏற்பட்ட பெயரான தஜோரா வளைகுடாவின் முத்து என அழைக்கப்படும் இந்நகரம் உலகில் அதிக கப்பற் போக்குவர்த்து நடைபெறும் பாதைகளுக்கு அண்மையாக அமைந்துள்ளது. இதனால் கப்பல்கள் எரிபொருள் நிரப்புவதற்கும் கப்பல்களுக்கிடையே பொருட்களை மாற்றுவதற்குமான நிலையமாக இந்நகரம் விளங்குகின்றது.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads