சீ. இரங்கசுவாமி ஐயங்கார்

இந்திய வழக்கறிஞர், பத்திரிகையாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சீனிவாச ராகவையங்கார் ரங்கசுவாமி ஐயங்கார் (Srinivasa Raghavaiyangar Rangaswami Iyengar) (6 ஜனவரி 1887 - 23 அக்டோபர் 1926) ஓர் இந்திய வழக்கறிஞரும் பத்திரிகையாளருமான இவர் 1923 முதல் 1926 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை தி இந்துவின் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர், சே. சீனிவாச ராகவையங்காரின் மகனும், எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்காரின் மருமகனும் ஆவார்.

விரைவான உண்மைகள் சீனிவாச ராகவையங்கர் ரங்கசாமி ஐயங்கார், பிறப்பு ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

இரங்கசாமி, ஒரு அரசு ஊழியரான சே. சீனிவாச ராகவையங்காருக்கு ஜனவரி 6, 1887 அன்று பிறந்தார். இராகவையங்கார் சென்னை மாகாணத்தில் பதிவுத் துறையில் தலைமை ஆய்வாளராகவும் பின்னர் வடோதராவின் திவானாகவும் பணியாற்றினார். இவர், தனது தந்தைக்கு நான்காவது மகன். கஸ்தூரி அண்ட் சன்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவிய பத்திரிகையாளர் எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார் இவரது சிறிய தந்தையாவார்.

இரங்கசுவாமி தனது பதினாறு வயதில் 1903 இல் மெட்ரிகுலேசன் முடித்து பின்னர் சட்டத்தில் பட்டம் பெற்றார். சிறிது காலம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்ற பிறகு, 1910இல் இந்துவில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.[1]

Remove ads

தொழில்

முதல் உலகப் போரின் போர்களைப் பற்றிய தனது கட்டுரைகளின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். 1910களின் இறுதியில், மிகவும் தீவிரமாக, பிரித்தானிய நிர்வாகங்களையும் அவர்களது விசுவாசிகளையும் குறிவைக்கத் தொடங்கினார். குறிப்பாக வ. ச. சீனிவாச சாஸ்திரியை "பிரித்தானிய அரசாங்கத்தின் செல்ல ஆட்டுக்குட்டி" என்று விவரித்தார். அதே நேரத்தில் இவர் மகாத்மா காந்தியையும் கடுமையாக விமர்சித்தார்.

1923 இல் கஸ்தூரி ரங்க ஐயங்கார் இறந்ததைத் தொடர்ந்து, கஸ்தூரி சீனிவாசன் இந்துவின் நிர்வாக இயக்குநராகவும் இவர் அதன் ஆசிரியராகவும் பொறுப்பேற்று அக்டோபர் 1926 வரை பணியாற்றினார்.

Remove ads

இறப்பு

இவர், 1926 அக்டோபர் 23 அன்று பெயர் தெரியாத நோயால் இறந்தார். இந்துவின் ஆசிரியராக எ. இரங்கசுவாமி ஐயங்கார் பொறுப்பேற்கும் வரை நிர்வாக இயக்குநர் கஸ்தூரி சீனிவாசன் 1926 முதல் 1928 வரை ஆசிரியராகப் பணியாற்றினார்.

இதையும் காண்க

மேற்கோள்கள்

குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads