எ. இரங்கசுவாமி ஐயங்கார்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

எ. இரங்கசுவாமி ஐயங்கார்
Remove ads

எ. இரங்கசாமி ஐயங்கார் (A. Rangaswami Iyengar) (ஜூலை 1877 - பிப்ரவரி 4, 1934) ஓர் இந்திய பத்திரிகையாளரும், வழக்கறிஞரும், அரசியல்வாதியுமாவார். இவர் மத்திய சட்டமன்ற உறுப்பினராகவும், 1928 முதல் 1934 இல் தான் இறக்கும் வரை தி இந்துவின் முதன்மை ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்காரின் மருமகனாவார்.

விரைவான உண்மைகள் எ. இரங்கசாமி ஐயங்கார், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

இரங்கசாமி ஐயங்கார் 1877 ஜூலையில் அப்போதைய தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள எருகத்தூர் கிராமத்தில் நரசிம்ம அய்யங்காருக்கு பிறந்தார். சென்னையில் சட்டம் பயின்றார். படிப்பு முடிந்ததும் மதராசு உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.[1]

தொழில்

1905 ஆம் ஆண்டில் கஸ்தூரி ரங்க ஐயங்கார் தி இந்துவை வாங்கியபோது, இவரை உதவி ஆசிரியராக நியமித்தார். இவர் 1905 முதல் 1915 வரை பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] நிறுவனத்தின் மற்றொரு வெளியீடான சுதேசமித்ரனின் விவகாரங்களை நிர்வகிக்க உதவி ஆசிரியர் பணியிலிருந்து விலகினார் . பின்னர், சுயாட்சிக் கட்சியில் சேர்ந்து 1925 முதல் 1927 வரை அதன் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.

இரங்கசாமி, 1923 மற்றும் 1926 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை மத்திய சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ். இரங்கசாமி ஐயங்கார் 1926 இல் இறந்தபோது, இவர், தி இந்துவுக்குத் திரும்பி 1928 முதல் 1934 வரை அதன் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றினார் முதன்மை ஆசிரியராக இருந்த காலத்தில், இவர் 1931 இல் இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டின் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார்.

Remove ads

இறப்பு

இவர், 1934 இல் இறந்தார். இவருக்குப் பிறகு தி இந்து பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக கஸ்தூரி சீனிவாசன் இருந்தார்.

இதையும் காண்க

படைப்புகள்

  • Iyengar, A. Rangaswami (1933). The Newspaper Press in India. Bangalore Press.
  • Iyengar, A. Rangaswami. The Indian Constitution, An Introductory Study.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads