சுடாத செங்கல்

கட்டுமானப் பொருளாகப் பயன்படும் சுடாத மண் செங்கல் From Wikipedia, the free encyclopedia

சுடாத செங்கல்
Remove ads

பச்சை செங்கல் அல்லது சுடாத செங்கல் (mudbrick அல்லது mud-brick) என்பது சுடப்படாத காய்ந்த செங்கல் ஆகும். இது களிமண், சேறு, மணல், நெல் உமி, வைக்கோல் போன்றவற்றைத் தண்ணீரால் நன்கு கலந்து அதனால் உருவாக்கப்பட்டது. சுடாத செங்கற்கள் கிமு 9000 இலிருந்து அறியப்படுகின்றன. இருப்பினும் கிமு 4000 முதல் அவற்றின் வலிமை மற்றும் ஆயுள் அதிகரிக்க சுடப்பட்டிருக்கின்றன. சுடாத பச்சை செங்கல்லால் கட்டப்பட்ட கட்டுமானத்தை பச்சகட்டு என்று அழைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது.

Thumb
ஜோர்டான் பள்ளத்தாக்கு, மேற்குக் கரை பாலஸ்தீனத்தில் புதிய, பச்சை செங்கற்கள் (2011)
Thumb
உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான கட்டுமானங்களில் சில வான ஈலாம் ஜிகுராட்களின் கட்டுமானத்திற்காக பச்சை செங்கல் பயன்படுத்தப்பட்டது. ஈரானில் கிமு 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோகா ஜான்பில் , சுட்ட செங்கற்களுடன் சேர்த்து பச்சை செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டது. [1]

சூளைக்கு எரிபொருளான விரகு மிகக் குறைவாக கிடைக்கும் வெப்பமான பகுதிகளில், செங்கற்கள் பொதுவாக வெயிலில் உலர்த்தப்படு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சில சமயங்களில், செங்கல் தயாரிப்பாளர்கள் பச்சை செங்கற்களின் மேலே சுட்ட செங்கற்களை வைப்பதன் மூலமோ அல்லது வார்ப்பால் மூடுவதன் மூலமோ அதன் ஆயுளை நீட்டித்தனர்.

Remove ads

பண்டைய காலம்

Thumb
முத்திரை பதிக்கப்பட்ட பச்சை செங்கல். எகிப்தின். 12வது வம்ச காலத்தியது. எகிப்திய தொல்லியல் துறையின் பெட்ரி அருங்காட்சியகம், லண்டன்

தெற்கு லெவண்டில் பச்சை செங்கல் உற்பத்தி மற்றும் கட்டுமானத்தின் வரலாறு மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) (எ.கா., PPNA ஜெரிகோ) வரையிலானதாக இருக்கலாம். [2] பச்சை செங்கற்கள், மணல், களிமண், நீர் போன்றவற்றுடன் நீடித்த விரைப்புப் பொருட்கள் (எ.கா. நறுக்கப்பட்ட வைக்கோல் மற்றும் பதர்) ஆகியவற்றினாலான கலவைக் கொண்டு தயாரிக்கப்பட்டன. இவை பொதுவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பண்டைய அண்மைக் கிழக்கு நாடுகள் முழுவதும் மண் சுவர்களைக் கட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்களாகும். [2] [3] சுடாதத செங்கற்கள் இன்றும் உலகம் முழுவதும் நவீன மற்றும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. [4] [5]

Remove ads

உலகம் முழுவதும் மண் செங்கல் கட்டிடக்கலை

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads