சுடாலின்கிராட் சண்டை

ஸ்டாலின்கிராடு சண்டை From Wikipedia, the free encyclopedia

சுடாலின்கிராட் சண்டை
Remove ads

ஸ்டாலின்கிரட் சண்டை (Battle of Stalingrad) இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி முதன்மையான அச்சு நாட்டுப் படைகளுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் சோவியத் நகரான ஸ்டாலின்கிரட்டில் (தற்போதைய வோல்கோகிராட்) ஆகஸ்ட் 21 1942 க்கும் பெப்ரவரி 2 1943க்குமிடையே நடைபெற்ற சண்டையாகும். சுடாலின்கிரட் சண்டையானது இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பிய அரங்கில் நடைபெற்ற போரின் திருப்புமுனையாக பரவலாக கருதப்படுகிறது. இருதரப்பு இறப்புக்க்களையும் இணைத்து மொத்தமாக 1.5 மில்லியன் பேர் வரை பலியான இச்சண்டை உலகின் மிக கொடுரமான சண்டையாகக் கொள்ளலாம். இச்சண்டையின் போது இருதப்பும் பொதுமக்கள், படைத்துரைச் சார் இறப்புக்களையும் இழப்புக்களையும் கவனத்திற் கொள்ளப்படாமல் செயற்பட்டன. சுடாலின்கிரட் சண்டையில் ஜெர்மனிய படைகளால் ஸ்டாலின்கிரட் நகரை முற்றுகையிட்டது, நகர் நடுவே இடம்பெற்றச் சண்டகள், சோவியத் எதிர்த்தாக்குதல் என்பன இணைத்து நோக்கபடுகிறது.

விரைவான உண்மைகள் ஸ்டாலின்கிரட் சண்டை Battle of Stalingrad, நாள் ...

காரணிகள்

இட்லரின் கருத்தியல் நோக்கம். அதாவது இந்த நகரம் ரஷ்யாவின் தெற்கு பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்களை தலைநகர் மாஸ்கொ கொண்டு செல்லும் முக்கியமான ரயில் பாதையில் உள்ளது. இதை வெற்றி கொள்வதன் மூலம் வடக்கு பகுதிக்கு கிடைக்கும் எண்ணெய் வளம் பாதிக்கும்.அதன் மூலம் நாஜி படைகள் வெற்றி பெறும். அதே வேளையில் இந்த நகரம் சோவியத் ஒன்றியத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் பெயர் கொண்டு உள்ளது. இது வீழ்த்தப்பட்டால் கிழக்கு முனையில் சண்டையிடும் அனைத்து ரஷ்ய படைகளும் மனோதிடம் உடைந்து தோற்று போகும். இதுவே இட்லரின் என்னவோட்டமாக இருந்தது. ஸ்டாலினின் அவர்களின் நிலை. இதே காரணத்தால் எவ்வளவு சேதாரம் நடந்தாலும் இந்த நகரை காக்கவேண்டிய பொருப்பு சோவியத் தலைமைக்கு கூடியது. சண்டையும் நீடித்தது. ===நாசி போர் தந்திரங்கள்=== சோவியத் ஒன்றியத்தின் படைபலத்தை ஒப்பிடும்போது நாசி படைகள் மேம்பட்ட தாகவும் அதிக எண்ணிக்கையிலும் இருந்தன. மேலும் நாசி படைகளுக்கு பக்க பலமாக‌ அச்சு நாடுகளின் படை பிரிவுகள் இருந்தன. டாங்கிகள், வான் எதிர்ப்பு துப்பாக்கிகள், சிறிய ரக டாங்கிகள், Stuka ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.இட்லரின் ஒரு பேச்சில் " நாம் அங்கே போய் காலால் ஒரு உதை விட்டால் போதும் அனைத்தும் இடிந்து விழும்" என்று உரைத்தார். அதை போலவே நாசி படைகளின் கிழக்கு நகர்தலில் எவ்வித பெரும் சண்டை வரவே இல்லை. சோவியத் ஒன்றியத்தின் மேற்கு பகுதி நகரங்களான கீவ் கர்ஸ்க் நடந்த சண்டைகள் இது போல் நீடித்து இருக்க வில்லை. அதே நிலைப்பாட்டில் இந்த சண்டையையும் நாசிகள் எதிர்பார்த்தனர்.

Remove ads

நகரத்தின் அமைப்பு

இந்த நகரம் வால்கோ நதிக்கரையில் அமைந்துள்ளது. இதன் பழம் பெயர் வால்கோகிராடு. ஒரு முக்கியமான தொழில் நகரமாகவும் பெரிய கனரக வாகனங்கள் உற்பத்தி மையமாகவும் விளங்கியது.நகரத்தின் விரிவாக்கம் மேற்கு பகுதியில் அதிகமாக இருந்தது.

Thumb
வரைபடம்

சோவியத் படைகளின் போர் தந்திரங்கள்

இந்த நகரின் பொருளாதாரம் போர் கருவிகளின் உற்பத்தி மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் தெரிந்து முற்றுகை தொடங்கும்போதே சோவியத் படைகள் முழு திறனுடன் போரிட்டன. இருப்பினும் நாசி படைகளின் பலம் பொருந்தியதாக இருந்தது. நாசி வான்படையின் தாக்குதல் கூடுதல் சேதாரம் விளைவித்தது.1942ல் குளிர்காலம் தொடங்கும் முன்பே நாசி படைகளின் குண்டு வீச்சு விமானங்கள் நகரத்தின் பெரும்பாலான கட்டடங்களைக் தரைமட்டம் ஆக்கின. எதிரியின் தாக்குதல் உள்ளான நகரங்களை விட்டு பொதுமக்கள் வெளியேறுவது இயல்பு. ஆனால் சோவியத் தலைமை இந்த நகரின் முக்கியத்துவம் அறிந்து ஒரு திட்டம் வகுத்தது. பொதுமக்கள் யாரும் நகரை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.நகரின் மேற்க்கு நாசி படைகளும் கிழக்கே ஆற்றின் கரையில் சோவியத் படைகளும் மையம் கொண்டன.இதற்கான காரணம், மக்கள் இருந்தால் மட்டுமே , இரண்டு ஆண்டுகளாக தோல்வி முகம் கண்டு போர் புரியும் சிப்பாய்களுக்கு தாய்நாட்டை காக்க வேண்டிய உத்வேகம் கூடும் என்று நம்பப்படுகிறது. மக்களும் அவ்வண்ணமே ஒத்துழைப்பு நல்கினர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads