சுத்தசாவேரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுத்தசாவேரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29வது மேளகர்த்தா இராகமாகிய "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 5 வது இராகமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்

ஆரோகணம்: | ஸ ரி2 ம1 ப த2 ஸ் |
அவரோகணம்: | ஸ் த2 ப ம1 ரி2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), ஆகிய சுரங்கள் வருகின்றன.
இதர அம்சங்கள்
- காந்தாரம், நிஷாதம் என்னும் சுரங்கள் வர்ஜம், ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இது ஒரு ஔடவ இராகம். உபாங்க இராகம்.
- இது ஒரு சுத்த கர்னாடக இராகம் ஆகும்.
- சர்வ ஸ்வர மூர்ச்சனாகார ஜன்ய ராகம். இவ்விராகம் மோகனத்தின் தைவத மூர்ச்சனையே ஆகும்.
- இதன் ரி, ம, ப, த சுரங்கள் கிரக பேதம் மூலம் முறையே உதயரவிச்சந்திரிக்கா, மோகனம், மத்தியமாவதி, இந்தோளம் ஆகியவற்றைக் கொடுக்கும்.
உருப்படிகள்[1]
திரையிசையில் இவ்விராகம்
- காதல் மயக்கம் ... - புதுமைப்பெண்
- கோயில் மணி ஓசை தன்னை ... - கிழக்கே போகும் ரயில்
- மலர்களில் ஆடும் இளமை புதுமையே ... - கல்யாணராமன்
- ராதா ராதா நீ எங்கே ... - மீண்டும் கோகிலா
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads