இந்தோளம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தோளம் (அல்லது ஹிந்தோளம்) இராகம் 20ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4ஆவது சக்கரத்தின் 2ஆவது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும். சுபகரமான இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.[1][2].
இலக்கணம்

ஆரோகணம்: | ஸ க2 ம1 த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ம1 க2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- ரிஷபம், பஞ்சமம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும்.
- சர்வ ஸ்வர மூர்ச்சனாகாரக ஜன்ய இராகம்.
- இவ்விராகத்தின் காந்தார, மத்திம, தைவத, நிஷாத மூர்ச்சனைகளே முறையே சுத்தசாவேரி, உதயரவிச்சந்திரிக்கா, மோகனம், மத்தியமாவதி ஆகிய இராகங்களாக ஒலிக்கின்றன.
Remove ads
உருப்படிகள்
திரையிசைப் பாடல்கள்
- "ஓம் நமசிவாயா..." - சலங்கை ஒலி
- "மலரோ நிலவோ மலைமகளோ..." -
- "தரிசனம் கிடைக்காதா..." – அலைகள் ஓய்வதில்லை – எஸ்.ஜானகி
- "நான் தேடும் செவ்வந்திபூ இது..."– தர்மபத்தினி – எஸ்.ஜானகி, இளையராஜா
- "பூவரசம்பூ பூத்தாச்சு..."– கிழக்கே போகும் ரயில் – எஸ்.ஜானகி
- "ஆனந்தத் தேன்காற்று..."– மணிப்பூர் மாமியார் – இளையராஜா
- "கண்ணா உன்னைத் தேடுகிறேன்..."– உனக்காகவே வாழ்கிறேன்
- "பாட வந்ததோர் கானம்..." -
- "ஸ்ரீதேவி என் வாழ்வில்..." -
- "பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு..."- மண்வாசனை
- "உன்னால் முடியும் தம்பி தம்பி"- உன்னால் முடியும் தம்பி தம்பி
- "மார்கழிப் பூவே..." -
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads