சுபாங் ஜெயா மாநகராட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுபாங் ஜெயா மாநகராட்சி அல்லது சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம்; (மலாய்: Majlis Bandaraya Subang Jaya; ஆங்கிலம்: Subang Jaya City Council); (சுருக்கம்: MBSJ) என்பது மலேசியா, சிலாங்கூர், சுபாங் ஜெயா மாநகரத்தையும்; பெட்டாலிங் மாவட்டத்தின் தென் பகுதிகளையும் நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ளது.
பொதுச் சுகாதாரம்; கழிவு மேலாண்மை; நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; கட்டடக் கட்டுப்பாடு; சமூகப் பொருளாதார மேம்பாடு; மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு; போன்ற செயல்பாடுகளுக்குப் பொறுப்பு வகிக்கிறது.
Remove ads
வரலாறு
1970-களில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் உள்ளாட்சி சட்டம் 1976-இன் பிரிவு-4 இன் (Local Government Act 1976) கீழ் பெட்டாலிங் மாவட்ட மன்றத்தை (மலாய்: Majlis Daerah Petaling -MDP; ஆங்கிலம்: Petaling District Council) நிறுவியது.
1994-ஆம் ஆண்டில், மாநில அரசாங்கம் அந்த அதிகாரத்தை ஒரு நகராட்சி மன்ற (Municipal Council) நிலைக்கு உயர்த்த முடிவு செய்தது. பின்னர் அதற்கு சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் (Subang Jaya Municipal Council) என்று மறுபெயரிட்டது. சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் 1 ஜனவரி 1997-இல் உருவாக்கப்பட்டது
சுபாங் ஜெயா நகராட்சி மன்றம்
பெட்டாலிங் ஜெயா நகராட்சி மன்றம் (Petaling Jaya Municipal Council - MBPJ); மற்றும் சா ஆலாம் நகராட்சி மன்றம் (Shah Alam Municipal Council - MPSA) ஆகிய இரு நகராட்சி மன்றங்களில் இருந்து ஏற்கனவே பெறப்பட்ட சில பகுதிகள்; அப்போதைய சுபாங் ஜெயா நகராட்சி மன்றத்தில் இணைக்கப் பட்டன.
டிசம்பர் 2019-இல், சுபாங் ஜெயா நகராட்சி மன்றத்தின் நகராட்சி மன்றத் தகுதி; மாநகராட்சி தகுதிக்கு உயர்த்தப் பட்டது. சுபாங் ஜெயா மாநகராட்சி (Subang Jaya City Council) என்று பெயர் மாற்றம் கண்டது. 20 அக்டோபர் 2020-இல் மலேசிய அரசிதழில் வெளியிடுவதற்கு மத்திய அரசாங்கத்திடம் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்டது.[2]
Remove ads
சுபாங் ஜெயா நகராட்சி முதல்வர்கள்
Remove ads
அலுவலகங்கள்
- சுபாங் ஜெயா (தலைமையகம்)
- பண்டார் புத்திரி பூச்சோங்
- செர்டாங் ஜெயா
காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads