சும்பன் - நிசும்பன்

From Wikipedia, the free encyclopedia

சும்பன் - நிசும்பன்
Remove ads

சும்பன் - நிசும்பன் (Sumbha and Nisumbha), என்பவர்கள் அசுர உடன் பிறப்புகள் ஆவார். இந்து சமயத்தில் தேவி துர்கையின் வீர தீரச் செயல்களைப் போற்றிப் பாடும் தேவி மகாத்மியம் எனும் நூலில் சும்ப - நிசும்பர்களை தேவி சக்தியின் வடிவான துர்கை போரிட்டுக் கொல்லும் நிகழ்வு கூறப்பட்டுள்ளது.

Thumb
சும்ப - நிசும்பர்களைப் போரில் வெல்லும் துர்கை

தேவி மகாத்மிய நூலில்

புஷ்கர் எனுமிடத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் கடும் தவம் நோற்று எவராலும் கொல்லப்படாத மற்றும் மூவுலகையும் ஆட்சி செய்யும் வரத்தையும், பெண்னால் தவிர பிற எவராலும் மரணம் நேரக் கூடாது என்ற வரத்தையும் பிரம்மனிடமிருந்து பெற்றவர்கள்.[1][2] சும்ப - நிசும்பர்களை தேவர்களின் தலைவனான இந்திரனை வென்று தேவலோகத்தையும், நாகர்களை வென்று பாதாள லோகத்தையும், மன்னர்களை வென்று முழு பூமியையும் கைப்பற்றி ஆண்டனர். முனிவர்களும் மற்றவர்களும் தவம் நோற்க அனுமதிக்கப்படவில்லை. மீறி தவமிருப்பவர்களை கொன்று குவித்தனர்.

சும்பன் - நிசும்பரிகளின் உதவியாளர்களான சண்டன் - முண்டன் எனும் அசுர ஒற்றர்கள், தேவியின் அழகைக் குறித்து சும்ப - நிசும்பர்களிடம் எடுத்துரைத்தனர். தேவியின் அழகை, வர்ணிப்பிலேய மயங்கிய சும்ப - நிசும்பர்கள், தேவியை தம்மிடம் அழைத்து வர சுக்ரீவன் எனும் அசுரனை அனுப்பி வைத்தனர். சுக்ரீவனின் அழைப்பை ஏற்க மறுத்த தேவியை, வலுக்கட்டாயமாக தூக்கி வர சண்டன் மற்றும் முண்டன் எனும் அசுரர்களை அனுப்பி வைத்தனர். சண்டன் - முண்டர்களை சிங்க வாகனத்தில் அமர்ந்திருந்த தேவி தனது வாளால் கொன்று குவித்தாள்.[2]

Remove ads

இறப்பு

தங்களுக்கு பெண்களால் மட்டுமே மரணம் நேரிடும் என்ற வரத்தை முற்றாக மறந்த சும்ப - நிசும்பர்கள், தேவியை நேரில் சென்று சந்தித்துப் போரிட முடிவு செய்தனர். துர்கைக்கும் - சும்ப நிசும்பர்களுக்கு இடையே நடந்த போரில், தேவி முதலில் நிசும்பனை வதைத்தாள்.[3]

பின்னர் கொடூரமாக எதிர்த்து வந்த சும்பனை, தேவி தனது திரிசூலத்தால் கொன்றாள். [4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads