சுரேஷ்வரர்

From Wikipedia, the free encyclopedia

சுரேஷ்வரர்
Remove ads

சுரேஷ்வரர் அல்லது சுரேஷ்வராச்சாரியார் (Sureśvara or Sureśvarācārya), கி. பி. 750இல் வாழ்ந்த அத்வைத வேதாந்தாதி. இவரின் இயற்பெயர் மந்தன மிஸ்ரர். ஆதிசங்கரரின் தலைமைச் சீடர். சங்கரரின் ஆணைப்படி சிருங்கேரியில் சாரதா பீடம் அமைத்து, அதன் முதல் பீடாதிபதியானவர். சுரேஷ்வரர் சங்கரரை விட வயதில் மூத்தவராகவும் இல்லறத்தவராகவும் இருந்தவர்.

விரைவான உண்மைகள் மந்தன மிஸ்ரர், பிறப்பு ...
Thumb
ஆதிசங்கரருடன், சீடர்கள் பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகர்
Remove ads

வாழ்க்கை

இந்தியாவின் பிகார் மாநிலத்தில், மிதிலை எனும் மகிஷ்மதி நகரத்தில் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்து மெய்யியல் அறிஞர். பூர்வ மீமாம்சை தத்துவ அறிஞரான குமரிலபட்டரின் சீடராக இருந்தவர். பூர்வ மீமாஞ்சம் மற்றும் அத்வைத சித்தாந்தங்களுக்கு விரிவான விளக்க உரை எழுதியவர். ஆதிசங்கரர் காலத்தில் வாழ்ந்தவர். சங்கரரின் சீடராக ஆவதற்கு முன் மந்தன மிஸ்ரர் என்ற பெயரில், மீமாம்ச தத்துவவாதியாக இருந்த இல்லறத்தவர். சங்கரருடன் நடந்த விவாதப் போட்டியில் தோல்வியடைந்த மந்தன மிஸ்ரர், இல்லறத்தை விட்டு, துறவறம் மேற்கொண்டு, சங்கரரை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர். ஆதிசங்கரின் சீடராக மாறிய மந்தன மிஸ்ரர், தன் பெயரை சுரேஷ்வரர் என மாற்றிக் கொண்டு அத்வைத சந்நியாச நெறியில் வாழ்ந்து, அத்வைத பிரம்ம சித்தி எனும் நூலை இயற்றிவர். அத்வைத சித்தாந்ததைப் பரப்ப தென்னிந்தியாவில், சிருங்கேரி சாரதா பீடத்தை நிறுவி அதன் முதல் பீடாதிபதியாக விளங்கியவர். ஆதிசங்கரர் உரை எழுதிய உபநித நூல்களுக்கு சுரேஷ்வரர் நீண்ட விளக்க உரைகள் எழுதியுள்ளார். எனவே இவரை வார்த்திககாரர் (நீண்ட விளக்க உரையாசிரியர்) என்பர்.

Remove ads

படைப்புகள்

அத்வைத வேதாந்த தத்துவத்தை எளிமையாகவும், விளக்கமாகவும், விளக்கும் வகையில் பல விளக்க நூல்களை இயற்றியுள்ளார்.[1]

  • பிரகதாரண்யக உபநிடத விளக்க உரை (ஆதிசங்கரரின் பிரகதாரண்யக உபநிட பாஷ்யத்திற்கு விரிவான விளக்க உரை நூல்)
  • நைய்ஷ்கர்மியசித்தி (Naiṣkarmya-siddhi )[2]
  • சம்பந்த வார்த்திகம் (ஆதிசங்கரரின் பிரகதாரண்யக உபநிடத பாஷ்ய அறிமுகத்திற்கு விளக்க உரை நூல்)
  • தைத்திரிய வார்த்திகம் (சங்கரரின் தைத்திரிய உபநிடத பாஷ்யத்திற்கு விரிவான விளக்க உரை நூல்)
  • மனசொல்லசா (Manasollasa) (சங்கரரின் தட்சிணாமூர்த்தி தோத்திர பாஷ்யத்திற்கு விளக்க உரை நூல்)
  • பஞ்சீகரணம் வார்திகம் (சங்கர்ரின் பஞ்சீகரண நூலுக்கு விளக்க உரை நூல்)


Remove ads

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads