சிருங்கேரி

From Wikipedia, the free encyclopedia

சிருங்கேரிmap
Remove ads

சிருங்கேரி (ஆங்கிலம்:Shringeri), இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் துங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள நகரமாகும்.

Thumb
விரைவான உண்மைகள்
Remove ads

இவ்வூரின் சிறப்பு

இங்கு ஆதிசங்கரர் நிறுவியதாகக் கருதப்படும் அத்வைத பீடம் (ஸ்ரீ சாரதா பீடம்) மற்றும் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. புராண கதைகளின்படி, ஆதி சங்கரர் இந்த இடத்தில் ஒரு தவளை நாகத்திற்கு கடும் வெயிலில் குடை பிடிப்பதைக் கண்டு வியந்து , தனது சிஷ்யர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கான இடமாக தேர்ந்தெடுத்து உள்ளார். இயற்கையின் விதிகளை மீறி பகைமை உணர்வை மிருகங்களே அந்த இடத்தில் கைவிட்டதே அதற்கு காரணம். அவர் இந்த இடத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். மேலும் அவர் இந்த மடத்தைத் தவிர்த்து வடக்கில் பத்ரிநாத் அருகில் ஜோதிர்மத்திலும், கிழக்கில்பூரியிலும், மேற்கில் துவாரகையிலும் மடங்கள் அமைத்துள்ளார்.

Remove ads

மக்கள் தொகை

2001 ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்த ஊரின் மக்கள் தொகை 4253. அதில் ஆண்கள் 52 சதவிகிதமும், பெண்கள் 48 சதவிகிதமும் ஆகும். ஸ்ரீங்கேரியில் எழுத்தறிவு விகிதம் 83 சதவிகிதம் ஆகும். அது இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 59.5 சதவிகித்தை விட அதிகமாகும். அதில் ஆண்களின் விகிதம் 86 சதவிகிதமும், பெண்களின் விகிதம் 79 சதவிகிதமும் ஆகும். சிருங்கேரியில் 8 சதவிகிதம் 6 வயதிற்கும் குறைவான குழந்தைகள் ஆகும். பெரும்பாலான மக்கள் கன்னடமும், இன்னும் சிலர் துளுவும்(இவர்கள் உடுப்பியைச் சேர்ந்தவர்கள்) பேசுகிறார்கள்.

Remove ads

சுற்றுலா தலங்கள்

சிருங்கேரியைச் சுற்றி பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஸ்ரீ சாரதாம்பா கோவில், ஸ்ரீ வித்யாசங்கரர் கோவில் மற்றும் பர்ஷ்வநாத் ஜெயின் கோவில் மிகவும் பிரசித்தமானது. மற்ற கோவில்கள் ஹொரநாடு, கொல்லூர் மற்றும் கலாசா அருகே அமைந்துள்ளது.

ஸ்ரீ சாரதாம்பா கோவில்

Thumb
அன்னை சாரதாம்பா கோவில்

ஸ்ரீ சாரதாம்பா கோவில் கல்வி மற்றும் ஞானக் கடவுளான தேவி சாரதைக்காகக் கட்டபட்டுள்ளது. இந்த கோவில் ஆதி சங்கரர் காலத்தைச் சேர்ந்தது. 14ம் நூற்றாண்டில், வித்யாரண்யர், சந்தன விக்ரகத்தை கல் மற்றும் தங்கத்தாலான விக்ரகமாக மாற்றியுள்ளார். கோவில் கட்டடமும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர், எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு தீவிபத்தின் காரணத்தால், தென் இந்திய ஹிந்து கலாசார கட்டிடக்கலை படி இப்போதைய கோவில் கட்டப்பட்டுள்ளது.[1]

Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads