சுவாசிகா
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுவாசிகா (Swasika) இவர் ஓர் இந்திய நடிகை. இவர் பெரும்பாலும் மலையாளத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களிலும் ஒரு சில தமிழ்த் இதிரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் வசந்தி (2021), குமாரி (2022), விவேகானந்தன் விரலானு (2024) மற்றும் லப்பர் பந்து (2024) ஆகிய படங்களில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர்.[1][3]
Remove ads
சொந்த வாழ்க்கை
சுவாசிகா, (பூஜா விஜய்) கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூரைச் சேர்ந்த அட்டுபுரத்து விஜயகுமார் (பகுரைனில் ஒரு கணக்காளர்) மற்றும் கிரிஜா ஆகியோருக்குப் பிறந்தார். இவருக்கு ஆகாஷ் என்ற சகோதரர் உள்ளார்.[4][5] இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, நடனப் பயிற்சியில் சேர்ந்தார்.[6] இவர் பிரேம் ஜேக்கப் என்பவரை 26 ஜனவரி 2024 அன்று திருமணம் செய்து கொண்டார்.[7]
தொழில்
இவரது முதல் படம் சுந்தரபாண்டியின் இயக்கத்தில் வெளிவந்த "வைகை", ஒரு காதல் கதையாக இருந்தது. அதில் இவருடைய பாத்திரம் உண்மையான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.[8] பிறகு, 2010இல் ராசு மதுரவன் இயக்கத்தில் கோரிப்பாளையம் என்ற படத்தில் நடித்தார். அதில் இவர் இரண்டாவது முன்னணி வேடத்தில் நடித்தார். இவர் படத்தில் நடித்தபோது ஒரு மாணவியாகவே இருந்தார்.[1] 2011இல் இவரது மூன்றாவது படமான மைதானம் படத்தில் நடித்ததற்காக விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். அதில் இவர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மதிக்கும் ஒரு கிராமியப் பெண்மணியாக நடித்தார்.[8]
இவரது அடுத்த படமான இயக்குநர் சீலனின் "கண்டதும் காணாததும்" என்ற படத்தில் நகரத்தில் வளரும் ஒரு கல்லூரிப் பெண்ணாக நடித்திருந்தார். 2012இல் இவர் சினிமா கம்பெனி என்ற படத்தில் மூலம் மலையாளத் திரையில் அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டில் சஜீவன் அந்திக்காடுவின் பிரபுவின்டே மக்கள் என்ற படத்தின் முன்னணி பாத்திரத்தில் தோன்றினார்.[1] 2014 தமிழ் திகில்ப் படம் "பண்டுவம்" படத்தில் இவர் ஒரு மனநல மருத்துவராக, நவீனமான பாத்திரத்தில் நடித்தார்.[9][10] இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குபவராக பணிபுரிந்தார். 2014 இல், ஜீவன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் இவர் மழவில் மனோரமாவில் "தத்துபுத்திரி" என்ற ஒரு தொலைக்காட்சித் தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். இவர் ஒரு சில விளம்பரங்களிலும் தோன்றினார்.
2017 ஆம் ஆண்டில் இவரது அடுத்த தொலைக்காட்சி தொடரான "மை மருமகன்" சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் சிந்தவிஸ்தாயா சீதா என்ற தொடர் ஏஷ்யாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபோது இவரது புகழ் மலையாள பார்வையாளர்களிடையே பரவியது. இவர் தற்போது ஃபிளவர்ஸ் மலையாள தொலைக்காட்சியில் சிந்தவிஸ்தாயா சீதா என்ற தொடரின் தொடர்ச்சியான "சீதா" வில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ஒரு பிரணாயினி தொடரில் கையெழுத்திட்டார். ஆனால் பின்னர் விலகிக் கொண்டார். மேடை நிகழ்ச்சிகளில் முக்கியமாக ஒரு நடன கலைஞராக இவர் செயல்படுகிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் தோன்றி வருகிறார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads